இந்த 3 ராசியினர் பிறரை பழி வாங்குவதில் திறமைசாலிகளாம்
ஒரு சிலருக்கு நாம் பிறரை கஷ்டப்படுத்துகின்றோம் நம்மால் அவர்கள் துயரப்படுகின்றார்கள் என்பது கூட அறியாமல் இயல்பாக அவர்களை காயப்படுத்தி விடுவார்கள். இதற்கு அவர்களுடைய ராசியும் ஒரு பங்கு வகிக்கிறது.
அதாவது ஒவ்வொரு ராசியும் அமைய பெற்று இருக்கும் கட்டமும் அதன் கிரகமும் தான் ஒரு மனிதனுடைய இயல்பு தன்மையை குறிக்கிறது. அப்படியாக இயல்பாகவே தன்னை அறியாமல் ஒருவரை அழ வைத்து கஷ்டப்படுத்தும் ராசிகள் யார் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்கு மிகவும் பிடிவாதக்காரர்கள். இவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று நாம் அப்பொழுது எளிதில் தெரிந்து கொள்ள முடியாது. இவர்கள் அவ்வளவு எளிதாக தங்களுடைய அன்பையும் வெளிப்படுத்த மாட்டார்கள். மேலும் இவர்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை அல்லது இவர்களை யாராவது அவமானம் செய்து விட்டார்கள் என்றால் அவர்களை பழிவாங்கும் வரை இவர்கள் அமைதி பெறுவதில்லை.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் எப்பொழுதும் தங்களுடைய அன்பை வெளிக்காட்டுபவர்கள். ஆனால் இவர்களை யாராவது ஏமாற்றுகிறார்கள் அல்லது இவர்களை சீண்டி பார்க்கிறார்கள் என்று தெரிந்து விட்டால் இவர்களுடைய மறு முகத்தை நாம் காணலாம். இவர்கள் யாரையும் தானாக முன்வந்து காயப்படும் படி பேச மாட்டார்கள் ஆனால் இவர்களை யாராவது பேசிவிட்டால் அவர்களை இவர்கள் சும்மா விடுவதில்லை.
தனுசு:
தனுசு ராசியினர் எப்பொழுதும் பார்ப்பதற்கு அமைதியாக இருப்பது போல் இருக்கும். ஆனால் அவர்கள் அனைத்தையும் மிக கவனமாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதலால் யார் எப்படி என்று நன்கு அறிந்து அவர்கள் செய்யும் செயலுக்கு ஏற்ப அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பதில் இவர்கள் வல்லமை பெற்றவர்கள். முதலில் இவர்கள் விட்டுக் கொடுத்துப் போவது போல் இருக்கும். ஆனால் அவர்கள் விட்டுக் கொடுத்துப் போவதற்கு பின்னால் பல காரணங்கள் இருப்பதை நாம் காலப்போக்கில் அறிந்து கொள்ளலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







