முடி காணிக்கை என்பது மரணத்துக்கு ஒப்பானது ஏன் தெரியுமா?
நம்முடைய இந்து மதத்தில் மொட்டை அடிப்பது என்பது நம் பழக்க வழக்கத்தில் கடைப்பிடித்து வரும் ஒரு முக்கிய சடங்கு ஆகும். அப்படியாக பலரும் தன்னுடைய இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்திடம் ஏதேனும் பிரார்த்தனை வைத்து அது நல்ல முறையில் முடிவடைந்தால் தங்களுக்கு என்னுடைய முடியை காணிக்கையாக தருகின்றேன் என்று ஒரு வேண்டுதலை வைப்பார்கள்.
பொதுவாக முடி காணிக்கை கொடுப்பது என்பது நாம் மீண்டும் பிறப்பதற்கு சமம். ஒரு சிலருக்கு ஜாதகத்தில் மிக மோசமான கிரக நிலைகள் நடந்து கொண்டிருக்கும் அல்லது அவர்கள் உயிருக்கே கூட ஏதாவது ஆபத்துக்கள் ஏற்படும் நிலையில் அவர்கள் ஜாதக கட்டம் இருக்கலாம்.
அவ்வாறு மோசமான கிரக நிலைகள் இருக்கிறது என்று தெரிந்து கொண்டால் நாம் கட்டாயமாக நம்முடைய இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வத்திற்கு முடி காணிக்கை செலுத்தி வழிபாடு மேற்கொள்ளலாம்.
அது நம்முடைய கெட்ட காலத்தை குறைத்து பொன்னான வாழ்க்கைக்கு வழி வகுக்கும். ஒருவர் புண்ணியம் செய்து இருக்கிறார்கள் என்றால் கட்டாயமாக அவர்களுடைய கிரக நிலைகள் மோசம் அடையும் பொழுது யாரேனும் தீர்க்கதரியாக அவர்களிடம் வந்து முடி காணிக்கை செலுத்தும் படி சொல்லிவிட்டு செல்வார்கள். அல்லது கால நிலை அவர்களை அவ்வாறு செய்ய தூண்டும்.
ஆதலால் முடி காணிக்கை என்பது பல துன்பங்களை மோசமான கால சூழ்நிலையை மாற்றக்கூடிய தன்மை கொண்டது. அதேபோல் விஞ்ஞானத்திலும் மொட்டை போடுதல் ஆரோக்கியமான நிலையாக பார்க்கப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







