நாளைய ராசி பலன் (30-04-2026)

Report

மேஷம்:

இன்று உங்களின் வேலை முடிவடைய சில கால அவகாசம் எடுக்கலாம். வேலையில் இடமாற்றம் செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள்.

ரிஷபம்:

வருமானத்தை உயர்த்துவதற்கான பணிகளில் ஈடுபடுவீர்கள். வாழ்க்கை துணையுடன் சற்று விட்டு கொடுத்து செல்வது அவசியம். கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த தடை விலகும்.

மிதுனம்:

இன்று தொழில் தொடங்குவதை பற்றி குடும்பத்தினரிடம் ஆலோசனை செய்வீர்கள். தேவையில்லாத விவாதங்களில் ஈடுபடாதீர்கள். சேமிப்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்:

மனதில் ஆயிரம் குழப்பங்களும் சிந்தனைகளும் தோன்றி மறையும். வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

ஜோதிடம்: ஒருவர் ராசியை வைத்து அவர்களுடைய குண நலன்களை தெரிந்து கொள்ள முடியுமா?

ஜோதிடம்: ஒருவர் ராசியை வைத்து அவர்களுடைய குண நலன்களை தெரிந்து கொள்ள முடியுமா?

சிம்மம்:

மனதில் உள்ள குழப்பங்கள் விலக தியானம் செய்யுங்கள். எதையும் தீர ஆராய்ந்து பார்க்காமல் செயல்படாதீர்கள். குடும்பத்தினருடைய முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

கன்னி:

இன்று பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் உடல் நிலையில் கவனமாக இருக்க வேண்டும். திருமணத்தில் இருந்து வந்த கசப்புகள் விலகும்.

துலாம்:

மனதில் எதிர்காலம் பற்றிய கவலையும் குழப்பமும் வரும். வேலைக்காக சில முக்கிய இடத்திற்கு செல்ல நேரலாம். திடீர் வெளிநாடு அல்லது வெளியூர் செல்ல வாய்ப்புகள் உண்டாகும்.

விருச்சிகம்:

கணவன் குடும்பத்தினரிடம் தேவையில்லாத வாக்குவாதம் வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களிடம் வீண் விவாதம் செய்தவர்கள் விலகிச் செல்வார்கள். திடீர் பரிசு பொருட்கள் கிடைக்கும்.

மீனாட்சி அம்மனுக்கு ஏன் ஒவ்வொரு வருஷமும் பட்டாபிஷேகம் நடக்கிறது தெரியுமா?

மீனாட்சி அம்மனுக்கு ஏன் ஒவ்வொரு வருஷமும் பட்டாபிஷேகம் நடக்கிறது தெரியுமா?

தனுசு:

பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் விலகும். மனதில் இறை வழிபாடு அதிகரிக்கும். சொந்தங்கள் மத்தியில் சந்தித்த மனக்கவலைகள் விலகி மகிழ்ச்சியாக இருக்க கூடிய நாள்.

மகரம்:

திருமணம் தொடர்பான பேச்சுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். எதிரிகளால் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும்.

கும்பம்:

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இன்று அற்புதமான வாய்ப்புகள் தேடி வரும். ஒரு சில முக்கியமான பொருட்களை தொலைக்க நேரலாம் கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்:

இன்று பிள்ளைகளால் மனக்கசப்புகள் ஏற்படலாம். ஒரு சிலருக்கு பணம் பற்றாக்குறை வரலாம். வேற்று மொழி பேசுபவர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US