இந்த 3 ராசியில் பிறந்தவர்களை அவ்வளவு எளிதாக சமாதானம் செய்ய முடியாதாம்
ஜோதிடம் என்பது 12 ராசிகள் 27 நட்சத்திரங்கள் ஒன்பது கிரகங்கள் என்ற அமைப்பைக் கொண்டு எதிர்காலத்தை கணித்து தெரிந்து கொள்ளகூடிய ஒரு அமைப்பு ஆகும்.
அப்படியாக இதில் ஒவ்வொரு ராசி, நட்சத்திரம் மற்றும் கிரகங்களுக்கும் தனித்துவமான தன்மை இருப்பதை காண முடியும். அந்த தன்மை ஒவ்வொரு மனிதர்களிடத்திலும் பிரதிபலிப்பதையும் நாம் காண முடியும்.
அந்த வகையில் நம்மை சுற்றி உள்ள ஒரு சில நபர்கள் நாம் எந்த ஒரு காரியம் செய்தாலும் அதில் ஏதேனும் ஒரு குறை கண்டுபிடித்து கொண்டே இருப்பார்கள். அவர்களை அவ்வளவு எளிதாக எந்த ஒரு விஷயங்களிலும் சமாதானம் செய்ய முடியாது.
இது அவர்களுடைய ராசியின் குணம் என்றும் சொல்லலாம். அப்படியாக எந்த 3 ராசியில் பிறந்த அன்பர்களை அவ்வளவு எளிதாக சமாதான செய்ய முடியாது என்பதை பற்றி பார்ப்போம்.

ரிஷபம்:
சுக்ரனின் ஆதிக்கத்தை கொண்ட ரிஷப ராசியினர் எல்லா விஷயங்களையும் மிகச் சரியாக செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் கொண்டிருப்பார்கள். மேலும் இவர்களுடைய கனவுகளும் எண்ணங்களும் மிகப் பெரிய அளவில் இருக்கும். அதனால் இவர்கள் அவ்வளவு எளிதாக ஒரு சிறிய கட்டமைப்புக்குள் வருவதற்கு தயக்கம் காட்டுவதை நாம் பார்க்க முடியும். மேலும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் இவர்களாக சமாதானம் செய்து கொண்டாலே அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வார்கள் தவிர்த்து நாமாக அவர்களை எந்த ஒரு காரியத்திற்காகவும் சமாதானம் செய்ய முடியாது.
கன்னி:
புதன் பகவானின் ஆதிக்கத்தை கொண்ட கன்னி ராசியினர் படைப்பாற்றல் மற்றும் அறிவாற்றலில் மிகச்சிறந்தவராக இருப்பார்கள். இவர்களிடம் நாம் எந்த ஒரு விஷயத்தையும் ஏமாற்றி வேலையை சாதகமாக செய்துவிட முடியும் என்று எண்ண முடியாது. அதேபோல் இவர்கள் ஒரு விஷயத்தை செய்யும் முன் அதை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து பல கேள்விகள் எழுப்பி அதற்கான சரியான பதில்கள் கிடைத்தால் மட்டுமே அவர்கள் அந்த வேலையை செய்வார்கள். இவர்களை மகிழ்ச்சி அடைய வைப்பது பல நேரங்களில் சிரமம் இருப்பதை நாம் காண முடிகிறது.
மீனம்:
குரு பகவானுடைய ஆதிக்கத்தை பெற்ற மீன ராசியினர் எப்பொழுதும் ஆசிரியர் போல் நடந்து கொள்ளக் கூடியவர்கள். இவர்களுக்கு ஒரு விஷயத்தில் நல்லது தெரிவதை காட்டிலும் அந்த விஷயத்தில் இருக்கக்கூடிய தீயதுதான் முதலில் கண்களுக்கு தெரியும். மேலும் இவர்கள் எல்லா விஷயங்களையும் மிக அழகாகவும் சரியாகவும் அமைய பெற்றிருக்க வேண்டும் என்று விரும்பக் கூடியவர்கள். ஆதலால் ஒரு ஆடை ஆபரணங்கள் எதுவாக இருந்தாலும் அதனுடைய அமைப்பு மிகச் சரியாக இருந்தால் மட்டுமே அணியக்கூடிய ஒரு அமைப்பை பெற்றவர்களாக இருப்பார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |