திருமணமான பெண்கள் பிறந்த வீடுகளில் இருந்து இந்த 7 பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாதாம்
திருமணம் முடிந்த பெண்கள் தன் தாய் வீட்டிற்கு வருகை தந்து செல்லும்போதெல்லாம் அந்த வீடுகளில் இருந்து ஏதேனும் ஒரு பொருட்களை அவர்கள் மிக அன்பாக எடுத்துச் செல்வதை நாம் பார்க்க முடியும். அதில் ஒரு மிகப்பெரிய சந்தோசமும் அடங்கி இருக்கிறது.
ஆனால் சாஸ்திர ரீதியாக இவ்வாறு திருமணமாகி வேறு ஒரு வீட்டிற்கு மருமகளாக சென்ற பிறகு தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்து குறிப்பிட்ட சில பொருட்களை எடுத்து செல்லக்கூடாது என்று சொல்லுகிறார்கள்.
இதற்கு பின்னால் ஒரு முக்கிய காரணங்களும் இருக்கிறது. அப்படியாக திருமணமான பெண்கள் தாய் வீட்டிற்கு வரும் பொழுது எந்த பொருட்களை கட்டாயமாக எடுத்துச் செல்லக்கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.

1. பிறந்த வீட்டிற்கு வரும்பொழுது கட்டாயமாக அவர்கள் உப்பு மற்றும் புளி எடுத்துச் செல்லக்கூடாது. இவை பிறந்த வீட்டினுடைய செல்வத்தை பாதிக்கக்கூடும் என்று சொல்கிறார்கள்.
2. மறந்தும் பிறந்த வீடுகளில் இருந்து எண்ணெய் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. இவை அந்தப் பெண் புகுந்த வீட்டிற்கும் அவளுடைய பிறந்த வீட்டிற்கும் ஏதேனும் மனக்கசப்புகள் இருந்தால் அவை மிகப்பெரிய அளவிற்கு எடுத்துச் சென்று விடுமாம்.
3. அதேபோல் பிறந்த வீடுகளில் இருந்து கசப்பான காய்கறிகள் கீரைகள் போன்ற எந்த ஒரு விஷயங்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. இவை ஒரு மனக்கசப்பை உருவாக்கக்கூடும்.
4. பிறந்த வீடுகளில் இருந்து பெண்கள் கட்டாயமாக அவர்களுடைய பூஜை அறைகளில் இருக்கக்கூடிய பூஜை பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது.
5. பிறந்த வீடுகளில் இருந்து கட்டாயமாக கூர்மையான எந்த ஒரு பொருட்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. அதாவது கத்தி, அரிவாள் போன்ற எந்த ஒரு இரும்பு பொருட்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. இவை ஒரு மிகப்பெரிய அளவில் ஒரு பிரச்சனையை உருவாக்கக்கூடும்.
6. பெண்கள் பிறந்த வீடுகளில் இருந்து வீடுகளை சுத்தம் செய்யக்கூடிய பொருட்கள் எதையும் எடுத்துச் சொல்லக்கூடாது. அதாவது துடைப்பம், மாப் மற்றும் அரிசி அளக்க பயன்படுத்தும் படி போன்றவற்றை கூட எடுத்துச் செல்லக்கூடாது என்று சொல்கிறார்கள்.
7. பிறந்த வீடுகளில் இருந்து கோல மாவும் எடுத்துச் செல்லக்கூடாது. தேவைப்படுகிறது என்றால் நாம் தாய் வீடுகளில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்லும் பொழுது அதற்கான ஒரு சில தொகையை கொடுத்துவிட்டு எடுத்து செல்லலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |