முருகப்பெருமான் கனவில் வந்தால் கட்டாயம் இது நடந்தே தீருமாம்
மனிதர்களுக்கு கனவு வருவது என்பது மிகவும் இயல்பான விஷயம்தான். அந்த கனவுகள் என்பது சமயங்களில் நம்முடைய ஆழ்மனதின் வெளிப்பாடாக இருந்தாலும் சமயங்களில் நம் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்ட சில கனவுகள் வருவதையும் பார்க்க முடிகிறது. அதாவது நாம் நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிற காரியம் நிறைவேற போகிறது என்றால் அதற்குரிய அறிகுறியாக சில கனவுகள் வருவதையும் நாம் பார்க்கலாம்.
அதே சமயம் நமக்கு ஏதேனும் ஆபத்துக்கள் நேர இருக்கிறது என்பதை முன்னதாகவே கனவின் வாயிலாக நம்மை சற்று விழிப்புணர்வோடு இருக்க செய்வதற்கான கனவுகள் வருவதையும் நாம் பார்க்க முடிகிறது. அப்படியாக கலியுக வரதனாக போற்றப்படும் முருகப்பெருமான் ஒருவருடைய கனவில் வருகிறார் என்றால் அவர்களுடைய வாழ்க்கை எவ்வாறு அமைக்க போகிறது என்பதை பற்றி பார்ப்போம்.

பொதுவாக தெய்வங்கள் கனவில் வருவது என்பது மிகவும் மங்களகரமான ஒரு விஷயமாக இருக்கிறது. மனிதர்கள் அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் துன்பம் இவை இரண்டையும் கலந்து வாழக்கூடிய நிலையில் இருக்கிறோம். துன்பமில்லாத மனிதர்களை நாம் காணவே முடியாது.
ஏதேனும் துன்பத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அவ்வாறான வேலையில் தெய்வங்கள் நம்முடைய கனவுகளில் வருவது மிகப்பெரிய மாற்றத்தை கொடுப்பதாக சொல்கிறார்கள். மேலும் முருகப்பெருமான் பல வடிவங்களில் பல கோவில்களில் நமக்கு அருள்பாளித்து வருகிறார்.
அப்படியாக ஒருவருடைய கனவில் முருகப்பெருமான் எந்த கோலத்தில் வந்தாலும் அந்த கனவானது அவர்களுடைய வாழ்க்கையில் நடக்க இருக்க கூடிய ஒரு நல்ல விஷயத்தை முன்கூட்டியே சொல்லக்கூடிய ஒரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் முருகப்பெருமான் குழந்தை வடிவமாக கனவில் தோன்றுகிறார் என்றால் அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதியை சந்திக்கப் போகிறார்கள் என்று சொல்கிறார்கள். மேலும், முருகப்பெருமானுடைய இணைப்பிரியாத வேல் ஒருவரின் கனவில் வருகிறது என்றால் அவர்களை முருகப்பெருமான் பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்ற போவதின்ன் அறிகுறியாக சொல்லப்படுகிறது.

அதே சமயம் முருகப்பெருமான் வள்ளி தேவானையுடன் நமக்கு கனவில் காட்சி கொடுக்கிறார் என்றால் வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடி வரப்போவதின் அறிக்கையாகும். முருகப்பெருமான் சிலை வடிவில் நம்முடைய கனவில் தோன்றினால் நாம் நினைத்த காரியம் எந்த தடைகளும் இல்லாமல் நடக்கக்கூடியதின் அறிகுறியாகும்.
மேலும் ஒருவர் கனவில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் காட்சி கொடுக்கிறார் என்றால் அந்த நபர் நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பொருளாதார கஷ்டம் அல்லது வாழ்க்கை தொடர்பான துன்பங்கள் அனைத்தும் விலகப் போவது அறிகுறியாகும்.
மிக முக்கியமாக முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வது போல் நம் கனவில் கண்டால் நம் வாழ்க்கையில் செல்வ வளங்கள் அதிகரித்து நாம் நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடந்து அனைத்து விஷயங்களும் நமக்கு சாதகமாக அமையப் போவதின் அறிகுறியாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |