2026: கட்டாயம் இந்த ராசிகள் மிகப்பெரிய அளவில் ராஜயோகம் பெறுவார்களாம்

By Sakthi Raj Mar 27, 2026 11:46 AM GMT
Report

ஜோதிட நிகழ்வின்படி 2026 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பல்வேறு கிரகம் மாற்றங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வியாபாரம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுக்க இருப்பதாக சொல்கிறார்கள்.

அந்த வகையில் சூரியன் மற்றும் குருபகவான் உடைய மாற்றம் இந்த வருடம் மிகப்பெரிய அளவில் சில ராசிகளுக்கு முன்னேற்றத்தை மற்றும் ராஜயோகம் கொடுக்கப் போகிறது. அப்படியாக 2026 ஆம் ஆண்டு எந்த ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் ராஜயோகமும் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்.

2026: கட்டாயம் இந்த ராசிகள் மிகப்பெரிய அளவில் ராஜயோகம் பெறுவார்களாம் | 3 Zodiac Signs Who Will Get Luck In 2026 Year

2026: ஏப்ரல் 23 வரை மிதுன ராசியினர் ஏன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?

2026: ஏப்ரல் 23 வரை மிதுன ராசியினர் ஏன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?

கடகம்:

கடக ராசி காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு கட்டாயம் அவர்களுடைய தொழில் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றத்தையும் திருப்புமுனையும் கொடுக்கப் போகிறது. குரு பெயர்ச்சி இவர்களுடைய வாழ்க்கையில் இழந்த செல்வத்தையும் மதிப்பையும் தேடி கொடுக்கப் போகிறது.

நீண்ட நாட்கள் வீடு கட்ட வேண்டும் என்று கனவு கொண்டிருப்பவர்களுக்கு வீடு கட்ட கூடிய யோகம் உருவாக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு இவர்களுக்கு பணக்கஷ்டத்தை போக்க போகிறது. நீண்ட நாட்கள் இழந்த சமுதாய அந்தஸ்தை இந்த காலகட்டத்தில் பெறுவீர்கள். முடிந்த வரை இவர்கள் சூரிய பகவானை நமஸ்காரம் செய்து வழிபாடு செய்தால் நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தை பெறலாம்.

அரசியலில் இருப்பவர்களுக்கு முக்கிய நபர்களின் அறிமுகம் மற்றும் அடுத்த கட்ட அரசியல் நகர்வை நோக்கி செல்லக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி சூழ்ந்து இருக்கும்.

விளக்கேற்றும் பொழுது மறந்தும் செய்யக்கூடாத முக்கியமான தவறுகள் என்ன?

விளக்கேற்றும் பொழுது மறந்தும் செய்யக்கூடாத முக்கியமான தவறுகள் என்ன?

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த 2026 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமண வாழ்க்கை அமைத்துக் கொடுக்க போகிறது. காதல் வாழ்க்கையில் இனிமையை பெறுவீர்கள். பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான பல்வேறு வழிகளில் நீங்கள் ஈடுபடுவீர்கள்.

கடின உழைப்பால் அங்கீகாரத்தை பெற்று சமுதாயத்தில் உங்களுக்கான ஒரு இடத்தை பெறக்கூடிய ஆண்டாகவே அமையப் போகிறது. பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி முன்னேற்றம் அடைவீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US