இந்த 3 ராசிகாரர்களுக்கு எப்பொழுதும் முருகப்பெருமானின் அருள் இருக்குமாம்
ஜாதக ரீதியாக நம்முடைய கிரக அமைப்புகளை பொறுத்து நமக்கு ஒரு சில தெய்வத்தின் அருள் எப்பொழுதும் இருக்கும். மேலும், ஒரு சிலர் ராசிக்கு இயல்பாகவே ஒரு சில கடவுளுடைய ஆசிர்வாதம் எப்பொழுதும் காப்பாற்றும்.
அப்படியாக, கலியுக வரதனாக போற்றப்படும், முருகப்பெருமானை 12 ராசிகளில் எந்த ராசிகள் வழிபாடு செய்யலாம்? எந்த ராசிகள் தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் வீட்டு அதிபதி செவ்வாய் பகவான். அதனால் இவர்களுக்கு அடிக்கடி வழக்குகள் மற்றும் சொத்து பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இவர்கள் முருகப்பெருமானை சரணடைந்து முருகப்பெருமான் உடைய மந்திரம் "சரவணபவ" என்ற மந்திரத்தை பாராயணம் செய்வதால் நல்ல மாற்றம் உருவாகும்.
அதோடு முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்கள் மற்றும் செவ்வரளி பூக்களை கொண்டு பூஜை செய்து வழிபாடு செய்யலாம். இவர்கள் அவ்வப்போது பழனி மலை முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்வது வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் நிலம் வீடு வாங்குவதில் சிக்கல் இருந்தால் இவர்கள் கோர்ட் வாசல் மிதிப்பதை விட முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்ற வழிபாடு செய்வது இவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
அதோடு இவர்கள் வீடுகளில் வேல் வைத்து தினமும் எலுமிச்சை பழம் குத்தி வைத்து வழிபாடு செய்யலாம். இவர்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீர திருச்செந்தூர் முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.
மகரம்:
இவர்களுக்கு செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தடைகள் நீங்க இவர்கள் முருகப்பெருமானை முழுமையாக சரண் அடைவது நல்லது.
இவர்கள் "ஓம் சரவணபவ" என்ற மந்திரத்தை 1008 முறை பாராயணம் செய்வது மற்றும் திருத்தணி திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று வழிபாடு செய்வது இவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல திறப்புமுனை பெற்றுக்கொடுக்கும்.
அப்படியாக, மேலும் 12 ராசிகளில் எந்த ராசியினர் முருகப் பெருமானின் வழிபாடு செய்யலாம் என்று இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |