உறவுகளிடம் எப்பொழுதும் போலியாக நடிக்க கூடிய 3 ராசியினர்.. யார் தெரியுமா?
எந்த ஒரு உறவாக இருந்தாலும் அங்கு உண்மை என்ற ஒரு பண்பு இருந்தால் மட்டுமே அந்த உறவு நீண்ட காலம் நீடிக்கும். ஆனால் ஒரு சிலரால் உண்மையாக இருப்பதிலேயே சில சங்கடம் உருவாகும். தேவையில்லாத விஷயங்களுக்கு கூட இவர்கள் நிறைய பொய் சொல்லியே பழகி விடுவார்கள்.
ஆக இவர்கள் சொல்லக்கூடிய ஒரு பொய்யானது எதிர்காலங்களில் மிகப்பெரிய அளவில் ஒரு பிரச்சனையை கொண்டு வந்து விடுகிறது. அப்படியாக எந்த ராசியில் பிறந்தவர்கள் அதிகம் பொய் பேசக்கூடியவராகவும் போலி முகத்துடனும் பழகக் கூடியவர்கள் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசியினர் எப்பொழுதும் தாங்கள் ஒரு ரகசிய வளைக்குள் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் தேவையில்லாத விஷயங்களுக்கு இவர்கள் பொய் சொல்ல தொடங்குவார்கள்.
அதாவது, எல்லா விஷயங்களும் தனக்கு சாதகமாக நடக்க வேண்டும் என்ற சுயநலத்தால் இவர்கள் சிறிய பொய் பேச தொடங்கி விடுகிறார்கள். ஆனால் அதுவே இவர்களுக்கு உறவுகளில் ஒரு மிகப்பெரிய அளவில் பிரச்சனையும் பிரிவினையும் கொடுத்து விடுகிறது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியை பொறுத்தவரை இவர்கள் நிறைய ரகசியங்களை காக்க கூடியவர். அதேபோல் இவர்களும் இவர்களுடைய ரகசியத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளக் கூடியவர்கள்.
தன்னுடைய காதலனாக இருக்கட்டும் அல்லது வாழ்க்கை துணையாக இருக்கட்டும் யாரிடமும் இவர்களுடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய விஷயத்தை வெளிப்படையாக பேச மாட்டார்கள். இதுவே காலப்போக்கில் ஒரு மிகப்பெரிய அளவில் இவர்களுக்குள் ஒரு விரிசலையை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது.
துலாம்:
துலாம் ராசியை பொறுத்தவரை இவர்கள் நிறைய விஷயங்களை மறைத்து கொண்டே இருப்பார்கள். காரணம் இவர்கள் எல்லாரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு மனப்பான்மை கொண்டவர்கள் என்பதால் வெளிப்படையாக பேச வேண்டிய இடங்களில் இவர்கள் நிறைய பொய் மட்டுமே பேசி விடுகிறார்கள்.
அந்த பொய்யானது இவர்களுக்கு சில நேரங்களில் பாதகமாக அமைந்துவிடும். ஒரு பிரச்சனையை சுமூகமாக கொண்டு செல்வதற்கு சொல்லக்கூடிய சாதாரண பொய் தான் இவர்கள் வாழ்க்கையை திருப்பி போடும் அளவிற்கு மிகப்பெரிய ஆபத்தை கொடுக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |