துணை மீது எப்பொழுதும் தேவை இல்லாத சந்தேகம்... உறவில் விரிசலை சந்திக்கும் ராசிகள்
ஒரு திருமண பந்தம் என்பது நிறைய புரிதல்களோடும் கணவன் மனைவி இடையே நிறைய விட்டுக் கொடுத்தலோடும் அமைய வேண்டும். அப்பொழுதுதான் அந்த வாழ்க்கை மிகச் சிறப்பானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமையும். இந்த வாழ்க்கையில் ஒருவர் தடுமாறினால் கூட அவை திருமண பந்தத்தில் ஒரு மிகப்பெரிய விரிசலை கொடுத்து விடும்.
அதிலும் குறிப்பாக தம்பதியினர் இடையே சந்தேகம் என்ற ஒரு தீய சக்தி நுழைந்து விட்டால் நிச்சயம் அந்த உறவு கண்ணாடி போல் உடைந்து விடும். இவ்வாறு ஒருவருக்கு சந்தேகம் எழுவதற்கு அவர்களுடைய ராசி அமைப்பும் கூட ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.
அப்படியாக ஜோதிட ரீதியாக எந்த ராசியில் பிறந்தவர்கள் தங்களின் துணை மீது அதிக அளவிலான சந்தேகங்கள் கொண்டு இருப்பார்கள். அது எதனால் வருகிறது என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசி பொருத்தவரை இவர்களை ஒரு அரை மணி நேரம் தனியாக விட்டால் போதும் இவர்கள் தேவை இல்லாத விஷயங்களையும் பற்றி யோசிக்க தொடங்கி விடுவார்கள். இவர்களுக்கு தங்களுடைய வாழ்க்கை துணையின் மீது அதிக அன்பு இருக்கும். ஆனால் அந்த அதீத அன்பின் வெளிப்பாடு சமயங்களில் ஒரு சந்தேகமாக மாறிவிடுவதையும் நாம் பார்க்கலாம். இவர்களின் உறவு விரிசலுக்கு பாதி நேரம் அவர்களின் வாழ்க்கை துணையின் சந்தேக குணமே காரணமாக உள்ளது.
கன்னி:
கன்னி ராசியினர் ஒரு விஷயத்தை தீர ஆராய்ச்சி செய்வதில் வல்லவர்கள். இவர்கள் நிறைய கதைகளை தேடி கேட்கக்கூடியவர்கள். ஆதலால் வெளியே கேட்கக்கூடிய கதை ஆனது நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து விடுமோ என்ற ஒரு அதீத எண்ணம் பல நேரங்களில் சந்தேகமாக மாறிவிடுகிறது. அதனால் துணை என்ன செய்தாலும் இதற்காகத்தான் இவர்கள் செய்கிறார்களோ என்ற ஒரு தவறான புரிதலாலே இவர்களுடைய திருமண பந்தம் அல்லது காதல் வாழ்க்கையில் சிக்கலை கொடுத்து விடுகிறது.
விருச்சிகம்:
எப்பொழுதும் இவர்களுக்கு வாழ்க்கையை பற்றிய பயம் இருக்கும். எங்கே நம்முடைய துணையை நம்மை விட்டு சென்று விடுவாரோ என்ற ஒரு அச்சம் இவர்களுக்கு எவ்வளவு நம்பிக்கையை கொடுத்தாலும் தொடர்ந்து இவர்களிடம் இருப்பதை நாம் காணலாம். இந்த அச்சமே இவர்களுக்கு பல நேரங்களில் அவர்களுடைய வாழ்க்கை துணையின் மீது தேவையில்லாத சந்தேகத்தை எழுப்பி விடுகிறது. அதனால் இவர்களுடைய துணை எப்பொழுதும் இவர்கள் அருகில் இருந்து ஒரு நம்பிக்கை ஊட்டக் கூடிய ஒரு நிலையிலே இருக்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |