2026: இந்த ராசியில் பிறந்தவர்கள் எதையும் தனியாக போராடி ஜெயிக்க கூடியவர்களாம்

By Sakthi Raj Apr 08, 2026 12:01 PM GMT
Report

 நம்மை சுற்றி ஒரு சிலரை பார்த்திருப்போம். அவர்களுடன் யார் இருந்தாலும் இல்லை என்றாலும் தனியாக எதையும் போராடி ஜெயிக்க கூடிய ஆற்றலை பெற்றிருப்பார்கள். அதாவது ஒரு காரியம் நடக்க வேண்டும் என்றால் பிறருடைய எதிர்பார்ப்பை எடுத்துக் கொள்ளாமல் சுயமாகவே முன்வந்து அவர்களுடைய வேலைகளை செய்து முடிக்கக்கூடிய ஒரு வலிமை கொண்டவர்களாக இருப்பார்கள்.

அப்படியாக ஜோதிட ரீதியாக எந்த ராசியில் பிறந்தவர்கள் எதையும் தனியாக போராடி ஜெயிக்க கூடிய தன்மை பெற்றவர்கள் என்று பார்ப்போம்.

2026: இந்த ராசியில் பிறந்தவர்கள் எதையும் தனியாக போராடி ஜெயிக்க கூடியவர்களாம் | 3 Zodiac Who Has A Power To Face Problems Alone

முருகா என்று கூப்பிட்டதால் பக்தருக்கு நடந்த அதிசயம் என்ன தெரியுமா?

முருகா என்று கூப்பிட்டதால் பக்தருக்கு நடந்த அதிசயம் என்ன தெரியுமா?

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் யாரிடமும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் எல்லா விஷயங்களையும் முடிந்த அளவிற்கு சுயமாகவே சிந்தித்து செயல்பட வேண்டும் என்று முயற்சி செய்பவர்கள். இருப்பினும் இக்கட்டான நிலையில் நண்பர்கள் கூட இவர்கள் உடன் இல்லை என்றாலும் அதற்கு இவர்கள் தயக்கம் காட்டாமல் அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை பற்றி மட்டும் யோசித்து அவர்கள் செயல்படக்கூடிய வலிமை கொண்டவர்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் சுதந்திரமாக செயல்பட விரும்புவார்கள். இவர்கள் தனிமை விரும்பிகள் கூட. பல நேரங்களில் இவர்களுக்கு தனிமை கசப்பாக இருந்தாலும் அந்த தனிமை அவர்களுடைய வாழ்க்கை சூழலை பாதிக்கும் அளவிற்கு அவர்கள் எடுத்துச் செல்ல மாட்டார்கள். மேலும் துலாம் ராசியினர் ஒரு சிலரிடம் எதிர்பார்ப்பு வைத்து அது நடக்கவில்லை என்றாலும் வருந்தாமல் அதற்கு அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட கூடியவர்கள்.

தமிழ்நாட்டில் கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும் 3 முக்கிய கோவில்கள்

தமிழ்நாட்டில் கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும் 3 முக்கிய கோவில்கள்

மகரம்:

மகர ராசியினர் தனிமை விரும்பிகள். இவர்கள் பொதுவாகவே யாரிடமும் எதையும் அவ்வளவு எளிதாக பகிர்ந்து கொண்டு அவர்களுடைய உதவிகளை நாட மாட்டார்கள். எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் தனக்குள்ளே வைத்துக் கொண்டு ஆறுதல் தேடிக் கொள்ளக் கூடியவர்கள். நண்பர்களாகவே இருந்தாலும் அவர்களிடம் அவ்வளவு வெளிப்படையாக பேச மாட்டார்கள். ஆதலால் பல நேரங்களில் பலருக்கும் தெரியாமல் இவர்கள் மிகப்பெரிய விஷயத்தை கூட தனிமையாக இருந்து போராடி ஜெயித்தவர்களாக இருக்கிறார்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US