சண்டைக்கு வாடா என்று அழைக்க கூடிய கோபக்கார ராசிகள் யார் தெரியுமா ?

By Sakthi Raj May 01, 2026 01:00 PM GMT
Report

நம்மை சுற்றி ஒரு சிலரை பார்த்திருப்போம். அதிக அளவில் அவர்களுக்கு கோபம் வரும். அதாவது நியாயமான விஷயங்களுக்கு யாராவது எதிராக செயல்பட்டால் நிச்சயம் அந்த இடத்தில் எவ்வளவு பெரிய பிரச்சனை இவர்களுக்கு வருவதாக இருந்தாலும் எதிர்த்து கேள்வி கேட்கக் கூடியவராக இருப்பார்கள்.

இருப்பினும் பல நேரங்களில் இவர்கள் ஒதுங்கி செல்ல வேண்டும், சண்டே எல்லாம் வேண்டாம் என்று பேசுபவர்களாக இருந்தாலும் ஏதேனும் ஒரு பிரச்சனை என்று வந்துவிட்டால் முதலில் சண்டைக்கு இறங்கக் கூடியவர்களும் இவர்களாகத்தான் இருப்பார்களாம். அப்படியாக எந்த ராசியினர் சண்டை என்றால் அங்கு முதலிடம் வகிக்க கூடியவர்கள் என்று பார்ப்போம்.

2026: மே மாதம் என்ன நடக்கப்போகிறது? பிரபஞ்சம் சொல்லும் செய்தி என்ன?

2026: மே மாதம் என்ன நடக்கப்போகிறது? பிரபஞ்சம் சொல்லும் செய்தி என்ன?

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களின் அதிபதி சூரிய பகவான். அவர் தான் தலைமைத்துவ பண்புக்கு காரணியாக இருக்கக்கூடியவர். மேலும், இவர்கள் பொறுமையாக இருப்பது போல் காணப்பட்டாலும் இவர்கள் மனதிற்குள் மிகப்பெரிய அளவில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும் எதையும் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடியவர்களாகவும், சண்டை என்று வந்துவிட்டால் அதில் இவர்கள் ஜெயிக்க கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

மேஷம்:

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவான்ஆவார். செவ்வாய் பகவான் தான் வீரம், கோபம், வலிமை ஆகியவற்றுக்கு காரணியாக இருக்கிறார். இவர்கள் பார்ப்பதற்கு சாந்தமாக இருப்பது போல் இருந்தாலும் இவர்கள் மிகவும் கோபம் கொள்பவர்கள். யாரேனும் இவர்களை பார்த்து இவர்களுக்கு பிடிக்காத கேள்வி கேட்டுவிட்டால் அந்த நபரிடம் மீண்டும் அதற்கான தக்க பதிலை கொடுக்கும் வரை இவர்கள் ஓயமாட்டார்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியின் அதிபதியும் செவ்வாய் பகவான் தான். இவர்கள் அவ்வளவு எளிதாக அமைதி நிலைக்குச் செல்ல மாட்டார்கள். எப்பொழுதும் நான் பேசுவதே சரி என்று அதைப் பிடித்துக் கொண்டு நிற்கக் கூடியவர்கள். பல நேரங்களில் சூழ்நிலை அமைதியாக இருந்தாலும் இவர்களாக முன் சென்று வம்பு இழுக்கக்கூடிய நிலையையும் நாம் பார்க்கலாம். இதற்கு காரணம் இவர்கள் தெளிவான மனநிலை கொண்டதால் யார் எப்படி என்று புரிந்து கொண்டு பிறகு அவர்களுக்கான பதிலடி கொடுக்கிறார்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US