12 ராசிகளில் மிகவும் ரோஷக்கார ராசிகள் யார் தெரியுமா? முடிவை மாற்றவே மாட்டார்களாம்
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். அந்த வகையில், ஒரு சிலரை பார்த்திருப்போம் அவர்கள் எதற்கும் இறங்கி செல்ல மாட்டார்கள். விட்டுக் கொடுத்துப் போக மாட்டார்கள். அந்த வகையில் 12 ராசிகளில் எந்த ராசியினர் மிகவும் ரோஷக்காரர் ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசி பொருத்தவரை இவர்களுக்கு பிடிவாத குணம் சற்று அதிகமாகவே இருக்கும். இவர்கள் மனதில் ஒன்றை வைத்து வெளியே ஒன்று செயல்படுத்த மாட்டார்கள்.
அதேபோல், இவர்கள் எல்லோரிடமும் சமமாக பழக வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள். அதனால் இவர்களுக்கு யாரேனும் பிடிக்காததை செய்துவிட்டால் மிகவும் ரோஷம் கொண்டு அவர்களிடம் திரும்ப பேசவே மாட்டார்கள்.
தனுசு:
தனுசு ராசியில் மிகவும் சுதந்திரமானவர்கள் தன்மானம் கொண்டவர்கள். இவர்களை யாரேனும் காயப்படுத்தினாலும் அசிங்கப்படுத்தினாலும் வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டார்கள்.
பெற்ற பிள்ளைகளாகவே இருந்தாலும் இவர்களை உதாசீனம் செய்தால் அவர்களிடம் மீண்டும் இயல்பாக பேசுவது மிகவும் கடினம்.
மகரம்:
மகர ராசியை பொறுத்தவரை இவர்களை வெளியே பார்க்கும் பொழுது அழகாக அமைதியாக இருப்பது போல் தோன்றும். ஆனால், உள்ளுக்குள் பல யோசனைகளை வைத்து கொண்டு இருப்பார்கள்.
இவர்கள் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதை பற்றியே நாம் ஆராய்ந்து தெரிந்து கொள்ள முடியாது. அந்த அளவிற்கு ரோஷமாக செயல்பட கூடியவர்கள் .
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |