2026-ல் கட்டாயம் இந்த ராசியினர் சொந்த வீடு கார் வாங்குவது உறுதி- யார் தெரியுமா
2026 ஆம் ஆண்டு இன்னும் 15 நாட்களில் பிறக்க உள்ளது. இந்நிலையில் நவகிரகங்கள் தங்களுடைய மாற்றத்தை சரியாக நிகழ்த்த காத்திருக்கிறார்கள். அதாவது 2026 ஆம் ஆண்டு கிரகங்கள் தங்களுடைய மாற்றங்களை மிகவும் சக்தி வாய்ந்ததாக எடுத்து வைக்கிறார்கள்.
இந்த மாற்றமானது நிச்சயம் உலக அளவிலும் தனிநபர் வாழ்க்கையிலும் ஒரு தாக்கத்தை உண்டு செய்யும். அப்படியாக மிகுந்த ஆவலுடன் 2026 ஆம் ஆண்டை வரவேற்க காத்திருக்கின்றன நேரத்தில் இந்த வருடத்திலாவது நமக்கு ஒரு சில நன்மைகள் நடந்து விடுமா என்ற ஏக்கம் பலருக்கும் இருக்கிறது.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு கிரகங்களின் முக்கிய தாக்கத்தினால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அமோகமாக உள்ளது என்று சொல்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

துலாம்:
நீண்ட நாட்களாகவே மன வருத்தத்தில் இருக்கக்கூடிய துலாம் ராசியினருக்கு அந்த மன உளைச்சல் எல்லாம் விலகப் போகிறது. 2026 ஆம் ஆண்டு துலாம் ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருப்பதால் இவர்கள் நினைத்த காரியத்தை 2026 ஆம் ஆண்டு அவர்கள் நடத்திக் கொள்ளலாம். அதைப்போல் கட்டாயமாக ஒரு சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்கக்கூடிய அற்புதமான யோகம் இருக்கிறது. பூர்விக சொத்துக்கள் இவர்களுக்கு வந்து சேரும்.
கும்பம்:
பல வருடமாக குழப்பங்களையும் தடைகளை மட்டுமே சந்தித்து வரும் கும்ப ராசிகளுக்கு நிச்சயமாக இந்த ஆண்டு அவர்கள் நினைத்தது நிறைவேற கூடிய அற்புதமான ஆண்டாக இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் இவர்களுக்கு இந்த ஆண்டு நினைத்தது போல் பொருளாதாரத்தில் ஒரு உயர்ந்த நிலையும் சொந்தங்கள் மத்தியில் தலை நிமிர்ந்து வாழக்கூடிய யோகம் கிடைக்கும். நிச்சயம் கும்ப ராசியினர் வீடு கட்டுவதற்கான அனைத்து வேலைகளையும் சிறப்பாக தொடங்கி விடுவார்கள்.
மேஷம்:
மேஷ ராசியினருக்கு புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதற்கான பொருளாதாரம் சிறப்பாக அமையும். நிச்சயமாக கடன் மற்றும் உங்களுடைய மன ரீதியான பிரச்சனைகள் விலகக் கூடிய ஆண்டு. ஒரு சிலருக்கு வங்கியில் கேட்ட பணம் கிடைத்து அவர்கள் அதை தொழில் அல்லது சொந்த வாழ்க்கைக்காக பயன்படுத்தக்கூடிய அற்புதமான ஆண்டாக இருக்கிறது. 2026ல் புதிய வீடு வாகனம் நிச்சயம் மேஷ ராசியினர் வாங்குவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |