இந்த 3 ராசிகள் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மன்னிக்கவே மாற்றங்களாம்
நம்மை சுற்றி ஒரு சில நபர்கள் இருப்பார்கள். நன்றி உணர்வு இல்லாமல் நன்மை செய்தவர்களுக்கே துரோகம் செய்யக்கூடியவர்கள். அப்படியாக அந்த துரோகத்தையும் ஒரு சிலர் மன்னித்து விடக்கூடிய மனப்பக்குவம் பெற்று இருப்பார்கள்.
ஆனால் ஒரு சிலரால் அல்லது துரோகத்தை அவர்களால் மன்னிக்கவே முடியாது. அந்த வகையில் எந்த ராசிகள் பிறந்தவர்கள் ஒருவர் நமக்கு செய்த துரோகத்தை இறுதி பயணம் வரை மன்னிக்கவே மாட்டார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசியை பொறுத்த வரை இவர்கள் ஒருவரை முழுமையாக நம்புவார்கள். அவர்களுக்காக எதையும் செய்வார்கள். அந்த காலகட்டங்களில் அந்த நெருங்கிய நபர் இவர்களுக்கு துரோகம் செய்யும் பொழுது இவர்கள் மிகவும் மனம் வேதனை அடைகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் அவர்களை எந்த காலத்தில் மன்னிப்பதும் இல்லை. அவர்களிடம் இவர்கள் மீண்டும் பேசக்கூடிய நிலை வந்தாலும் பேச மாட்டார்களாம்.

சிம்மம்:
இவர்களால் ஒருவர் தவறு செய்தாலே மன்னிக்க முடியாது. அந்த வகையில் ஒருவர் இவர்களுக்கு துரோகம் செய்தால் அதை இவர்களால் முழுமையாக ஏற்றுக் கொள்ளவே முடியாதாம். இவர்கள் நம்முடைய வாழ்க்கையில் இனிமேல் இல்லை என்று இவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விடுகிறார்கள்.
மகரம்:
ஒருவர் தெரிந்து தவறு செய்தால் கூட அதை அவர்கள் மன்னித்து விடுகிறார்கள். ஆனால் திட்டமிட்டு ஒருவருக்கு துரோகம் செய்வதை இவர்களால் மன்னிக்கவே முடியாது. அந்த நபர்களுடன் எவ்வளவு பெரிய இணக்கமான உறவாக இருந்தாலும் அதை உடனடியாக துண்டித்து நகர்ந்து செல்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |