ஜாதகத்தில் 5 ஆம் இடம் ஏன் இவ்வளவு முக்கியமானது? 5 ஆம் இடம் சொல்லும் ரகசியம் என்ன
ஜாதகத்தில் ஐந்தாம் இடம் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அப்படியாக ஐந்தாம் இடம் வலிமையாக இருந்தால் அந்த நபர் புத்திசாலியாக மட்டுமல்லாமல் அவர்களுக்கு வாழ்க்கையில் நிறைய வாய்ப்புகளும் வெற்றிகளும் வந்து சேரலாம்.
அதாவது எதற்கும் கஷ்டப்படாமல் எல்லாம் அவர்களுக்கு எளிதாக கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. அப்படியாக, ஐந்தாம் இடத்தில் முக்கியத்துவமும் ஐந்தாம் இடத்தில் இருக்க கூடிய கிரகங்கள் உடைய பலன்களை பற்றியும் பார்ப்போம்.
1. ஒருவருக்கு ஐந்தாம் வீட்டில் குரு பகவான் இருந்தால் அந்த நபர் நல்ல உயர்ந்த கல்வி, ஞானம், புத்திசாலியான குழந்தைகள், பூர்வ புண்ணிய பலன்களை பெறுகிறார்கள்.
2. அதுவே சுக்கிர பகவான் இருந்தால் காதலில் வெற்றி, கலைதிறன், எழுத்து துறையில் சிறந்து விளங்குதல், போன்ற விஷயங்களில் சிறப்பாக இருப்பார்கள்.
3. புதன் இருந்தால் நல்ல வேகமானசிந்தனைகள், எழுத்து திறன், வணிக துறைகள் சிறப்பாக விளங்குவார்கள்.
4. சந்திர பகவான் இருந்தால் இவர்கள் உணவுப்பூர்வமான அறிவு மற்றும் முழு உணர்வு, குழந்தைகளின் பாசம், அன்பான குணம் ஆகியவை பெற்றிருப்பார்கள்.

5. ஐந்தாம் இடத்தில் சூரிய பகவான் இருந்தால் இவர்கள் தலைமைத்துவ பண்பு தன்னம்பிக்கை புகழ் திறமையால் அங்கீகாரம் ஆகியவை பெறுகிறார்கள்.
6. அதுவே செவ்வாய் இருந்தால் இவர்களுக்கு நிறைய போட்டி மனப்பான்மை இருக்கும். துணிச்சலாக செய்யக்கூடிய வேலைகளை செய்வார்கள். விளையாட்டு திறன் இருக்கும் தைரியமாக முடிவெடுப்பார்கள்.
7. ஐந்தாம் வீட்டில் சனிபகவான் இருந்தால் இந்த நபர் நல்ல ஒழுக்கத்துடனும் பொறுமையுடன் காதல் மற்றும் குழந்தை பாக்கியம் தாமதமாக இருந்தாலும் விரைவில் வெற்றிகள் பெறுகிறார்கள்.
8. அதுவே ஐந்தாம் இடத்தில் ராகு பகவான் இருந்த வித்தியாசமான சிந்தனை கொண்டிருப்பார்கள். பெயர் புகழ் பெறும் வாய்ப்புகள் இருக்கும்.
9. அதுவே ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால் காதலில் பற்றின்மை, ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு, ஆழமான அறிவு, ஆராய்ச்சி மனப்பான்மை போன்றவை அதிகமாக இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |