சுக்கிர பகவானின் ஆசியால் செல்வாக்கோடு வாழும் 3 முக்கிய ராசிகள்

By Sakthi Raj Feb 10, 2026 10:00 AM GMT
Report

ஜோதிடத்தில் சுக்கிர பகவான் தான் ஒரு மனிதனுக்கு செல்வம், மகிழ்ச்சி, ஆடம்பரம் போன்ற சுகபோக வாழ்க்கையை வழங்க கூடியவர். ஒருவருக்கு ஜாதகத்தில் சுக்கிர பகவான் நல்ல நிலைமையில் அமர்ந்து விட்டால், அந்த ஜாதகர் எதற்கும் பயப்பட தேவையில்லை.

அவர்கள் வாழ்க்கையில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் சுக்கிரனின்முழு ஆசீர்வாதமும் அருளும் பெற்று செல்வ செழிப்போடு வாழ்வார்களாம். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

சுக்கிர பகவானின் ஆசியால் செல்வாக்கோடு வாழும் 3 முக்கிய ராசிகள் | 3 Zodiac Will Have Sukiran Blessings In Life

ஆண்டிற்கு ஒரு முறை மஞ்சள் நிறமாக மாறும் குற்றாலம் அருவி - காரணம் தெரியுமா

ஆண்டிற்கு ஒரு முறை மஞ்சள் நிறமாக மாறும் குற்றாலம் அருவி - காரணம் தெரியுமா

ரிஷபம்:

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். ஆதலால் ரிஷப ராசியினர் இயல்பாகவே சுக்கிர பகவானுடைய தாக்கத்தை பெற்றிருப்பார்கள். இவர்கள் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமான தோற்றத்துடனும் வசீகரமான பேச்சும் ஒருவர் இவர்களை பார்த்த நொடியில் கவரக்கூடிய ஒரு தன்மையில் இருக்கும்.

மேலும் எப்போதும் இவர்கள் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற விருப்பமும் கொண்டு இருப்பார்கள். அதற்கு தகுந்தாற்போல் அவர்களுடைய வாழ்க்கை முறையையும் அவர்கள் மாற்றி அமைப்பதற்கான ஆசிர்வாதத்தை சுக்கிரன் வழங்குகிறார்.

துலாம்:

துலாம் ராசியின் அதிபதியும் சுக்கிர பகவான் தான். மேலும் துலாம் ராசியினர் பார்ப்பதற்கு எளிமையாகவும், ரசனை மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள். எந்த ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றாலும் அது ஒரு தனித்துவமான அமைப்பில் இருக்க வேண்டும் என்று விரும்பக் கூடியவர்கள்.

அதை போல் இவர்களுக்கு அழகு கலை சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாடு இருக்கும். சில நபர்கள் இந்த துறைகளில் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தவர்களும் உண்டு. எப்பொழுதும் தங்களை சாதாரணமாக காட்டிக் கொள்வதற்கு இவர்கள் விரும்ப மாட்டார்கள்.

2026: மாசி மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

2026: மாசி மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

மீனம்:

மீன ராசியில் தான் சுக்கிர பகவான் உச்சமாக இருக்கிறார். ஆதலால் மீன ராசியினருக்கு அதிக அளவில் பண வசதி இயற்கையிலேயே இவர்களுக்கு கிடைக்கக்கூடிய அமைப்பு இருக்கும். இவர்களுடைய பிறந்த வீடும் ஒரு செல்வந்தராக இருக்கக்கூடிய அமைப்பு உண்டு.

இவர்கள் பார்ப்பதற்கும் ஒரு கண்ணியமான தோற்றம் உடையவர்கள். எதையும் ரசித்து செய்ய வேண்டும் என்று விரும்பக் கூடியவர்கள். வாழ்க்கையை ரசித்து வாழக்கூடியவர்கள். மேலும், சுக்கிர பகவானின் அருளால் இவர்களுக்கு பணத்தட்டுப்பாடு என்பது பெரிய அளவில் பாதிப்பு கொடுக்காத வகையில் இருக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US