காலை எழுந்தவுடன் இந்த 3 விஷயங்கள் செய்தால் நிச்சயம் தோஷம் உண்டாகுமாம்
ஒவ்வொரு மனிதனுக்கும் காலை நேரம் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அதனால் தான் காலை எழுந்தவுடன் ஆன்மீகத்தில் நம் மனதை நேர்மறையாக வைத்திருக்கக்கூடிய விஷயங்களை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
அப்படியாக காலை எழுந்தவுடன் தவறியும் ஒரு சில விஷயங்கள் செய்வதினால் நமக்கு பல தோஷங்கள் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.

1. காலை எழும்பொழுது நிச்சயம் பகவானுக்கு நன்றி செலுத்திய படி எழ வேண்டும். முந்தைய நாள் கோபம் அல்லது நீண்ட நாட்களாக மனதில் இருக்கக்கூடிய வஞ்சகம் இவை எல்லாம் மனதை விட்டு நீங்காமல் காலை எழும்பொழுதும் அதே எண்ணங்கள் நம் மனதில் இருக்கின்ற நேரத்தில் கட்டாயம் நாள் முழுவதும் அவை நம்மை பாதிக்கக்கூடும். இதுவே பிற்காலங்களில் மிகப்பெரிய தோஷமாகவும் மாறுகிறது.
2. முடிந்தவரை நாம் சூரிய உதயத்திற்கு பிறகு தூங்குவதை தவிர்த்து விட வேண்டும். சூரியன் உதித்த பிறகு தூங்குவது என்பது மிகப்பெரிய பொருளாதார சிக்கலை கொடுத்து விடும். மேலும், சூரியன் உதித்த பிறகு தூங்குவது என்பது சூரிய பகவானையும் மகாலட்சுமி தேவியையும் அவமதிப்பதாக நம்பப்படுகிறது.
ஆதலால் முடிந்தவரை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து சூரிய பகவானுக்கு நீர் படைத்து வழிபாடு செய்யும் போது நிச்சயம் மகாலட்சுமியின் அருளால் நம்முடைய வீடுகளில் நிதி நிலைமை மேம்படும்.

3. வீடுகளில் எவ்வளவு பெரிய குழப்பங்கள் இருந்தாலும் காலை நேரங்களில் சண்டை இடுவதை நாம் தவிர்த்து விட வேண்டும். இவை நாள் முழுவதும் நம்மை பாதிக்க கூடிய ஒரு விஷயமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் வீடுகளில் எதிர்மறை ஆற்றலை இவை அதிகரித்து விடுகிறது.
மேலும், ஒவ்வொரு நாளும் நமக்கு இறைவன் கொடுக்கின்ற கூடுதல் வாய்ப்பே ஆகும். ஆதலால் நம்முடைய கர்ம வினைகளை நாம் குறைக்க வேண்டுமே தவிர மீண்டும் தீய செயல்களில் ஈடுபட்டு கர்ம வினைகளை அதிகரிக்க கூடிய நிலைக்கு நாம் செல்லக்கூடாது. அதனால் நல்லதே செய்து இறைவனை நினைத்து வாழ்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |