மீன ராசியில் சதுர்கிரஹி யோகம்: 3 ராசிகளுக்கு கொட்டும் பணமழை
ஜோதிடத்தின் படி, ஒன்பது கிரகங்களும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவார்கள். இந்த நேரத்தில் வியாழன் ராசியில் நான்கு கிரகங்களின் சேர்க்கை நடக்க உள்ளது. சூரிய பகவான் சமீபத்தில் பெயர்ச்சி காரணமாக மீன ராசியில் யோகம் உண்டானது.
சதுர்கிரஹி யோகத்தின் விளைவுகள் சில ராசிகளுக்கு சாதகமாகவும், சில ராசிகளுக்கு கடினமாகவும் இருக்கலாம். அப்படியாக, மீன ராசியில் சதுர்கிரஹி யோகம் எந்த ராசிகளுக்கு என்ன பலன் கொடுக்கப்போகிறது பார்ப்போம்.
தனுசு:
சதுர்கிரஹி யோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு பல விதமான நன்மைகள் வழங்கும். இந்த நேரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு பொருளாதார வளர்ச்சி சிறப்பாக அமையும். இந்த காலகட்டத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை துணையுடன் நல்ல பிணைப்பு உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் நற்செய்திகள் கிடைக்கும்.
விருச்சிகம்:
சூரியன், ராகு, சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கையால் உருவாகும் சேர்க்கையால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மங்களகரமான யோகம் உண்டாகும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு உண்டான வழக்கு சம்பந்தமான பிரச்சனைகள் நல்ல முடிவு பெரும். உடல் ஆரோக்கியம் நல்ல முன்னேற்றம் அடையும்.
கடகம்:
சூரியன், ராகு, சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கையால் உருவாகும் சேர்க்கையால் கடக ராசிக்காரர்களுக்கு உங்கள் வேலையில் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை நல்ல தீர்வு பெரும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |