வாழ்க்கை என்பது குறுகிய காலம் என்று தெரிந்தும் நாம் பல நேரங்களில் மனபாரத்தோடும் அமைதியின்மையோடும் வாழ்கின்றோம். இதற்கு காரணம் நாம் கடந்து வந்த வலிகள், கசப்பான அனுபவங்கள், கோபம் நிறைவேறாத ஆசை எதிர்பார்ப்புகள் என எல்லா விஷயங்களையும் நாம் சுமந்து கொண்டே இருப்பதால்தான்.
ஆனால், ஒரு நாள் இது எல்லாவற்றையும் மெதுவாக ஒவ்வொன்றாய் விட்டு விட்டு வரும்பொழுது வாழ்க்கையில் அதிசயம் நடக்கிறது. அந்த வகையில், கௌதம புத்தரின் வாழ்வியல் போதனைகள் தரும் ஒரு ஆழமான உண்மை பற்றி பார்ப்போம்.

மன அமைதிக்கான 4 முக்கிய பாடங்கள்:
1.மரத்தின் இலை தரும் பாடம்:
மரத்தில் இருக்கக்கூடிய இலைகள் கீழே விழுவதால் மரம் உடைந்து விடுவதில்லை. மரம் அதை விடுவிப்பதால் இயல்பாக அந்த இலை கீழே விழுகிறது. இதேபோன்றுதான் வாழ்க்கையில் நாம் சில விஷயங்களை விட்டு விடாவிட்டால் நாம் உடைந்து போகின்றோம்.
2. பற்றுதலே துன்பத்தின் வேர்:
ஒவ்வொரு மனிதனுடைய கடந்த கால வலிகளும் அவன் கையில் இருக்கும் சூடான நிலக்கரியை போல. அதை நாம் இறுக்கப்பிடித்துக் கொண்டிருக்கும் வரை எப்பொழுதும் அவை நம்மை சுட்டுக் கொண்டே இருக்கிறது. அதை விட்டு விடும் பொழுது தான் உண்மையான சுதந்திரம் கிடைக்கிறது.

3. விட்டுவிடுவது தோல்வி அல்ல, விடுதலை:
நாம் கடந்த கால வலிகள், கோபங்கள் இவையெல்லாம் விட்டுவிடுவதால் நாம் தோற்றுப் போகின்றோம் என்று அர்த்தம் அல்ல. அது உங்கள் மன அமைதிக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய ஒரு முக்கியத்துவம். நீங்கள் உங்கள் மனதை காலியாக வைத்திருக்கின்ற பொழுது தான் புதிய மகிழ்ச்சியும் வாய்ப்புகளும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும்.
4. நதியைப் போல பாய்ந்து செல்லுங்கள்:
நீங்கள் ஆறு ஓடுவதை பார்த்திருப்பீர்கள். ஆறு எவ்வாறு தன்னுடைய பாதையில் வரும் பாறைகளுடன் சண்டையிடாமல் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது, அதேபோல்தான் நாமும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையின் ஓட்டத்தோடு நம் வாழ கற்றுக் கொள்ள வேண்டும், உங்களுக்கு மன அமைதி வேண்டுமென்றால் இன்று நீங்கள் பிடித்து வைத்திருப்பதை முதலில் விட்டு விட தயாராகுங்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |