2026 ஆம் ஆண்டு குபேர ராஜ யோகம் பெறப்போகும் 4 முக்கிய ராசிகள்
ஜோதிடம் என்றாலே கிரகங்களை வைத்து கணிக்க கூடிய ஒரு கணக்கு ஆகும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு கிரகங்கள் பல நிலையில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
அந்த வகையில் சனி உடைய நிலையும், வருட இறுதியில் நடக்கக்கூடிய ராகு கேது பெயர்ச்சியும், 12 ஆண்டுகளுக்குப் பிறகு குருபகவான் கடக ராசியில் ஜூன் இரண்டாம் தேதி பெயர்ச்சி ஆகக்கூடிய இந்த நிலையும், ஒரு சில ராசிகளுக்கு குபேர யோகத்தை கொண்டு வந்து சேர்க்கிறது.
இதனால் அந்த ராசிகளுக்கு மிகப்பெரிய ராஜயோகம் மற்றும் திடீர் பணவரவுகள் காத்திருக்கிறதாம். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு பிறக்கின்ற புத்தாண்டு இவர்களுக்கு கிரகங்கள் எல்லாம் சாதகமான நிலையில் இருக்கிறது. இவர்கள் நினைத்த காரியத்தை தான் இவர்கள் இந்த வருடம் முழுவதும் சாதிக்க போகிறார்கள்.
அது மட்டும் அல்லாமல் கிரகங்களுடைய மாற்றமானது இவர்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல ஏற்றத்தை கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்களாக பண சிக்கலில் இருந்து வந்து கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் அதிலிருந்து விடுதலை கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு அவர்களுடைய வாழ்க்கை இப்பொழுது தான் தொடங்குகின்ற நிலை என்றே சொல்லலாம்.
இந்த 2026க்கு பிறகு அவர்கள் நிச்சயம் குடும்பத்திலும் தொழிலிலும் ஒரு நல்ல மாற்றம் பெற காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு மனதில் இப்பொழுது தான் ஓரளவு நிம்மதி உண்டாகும்.
மேலும் இந்த குபேர யோகமானது இவர்களுக்கு திருமண வாழ்வை அமைத்துக் கொடுக்க போகிறது. அது மட்டுமல்லாமல் இவர்கள் எதிர்பாராத சம்பளத்தை இவர்கள் கைகளில் கொடுத்து வேலை பார்க்கக்கூடிய ஒரு அற்புதமான நிலையை கொடுக்க காத்திருக்கிறது.
துலாம்:
மீண்டும் மீண்டு வந்த துலாம் ராசியினர் என்று தான் சொல்ல வேண்டும். கடந்து சில தினங்களாகவே துலாம் ராசிகள் படாத துன்பமில்லை.
எதை எடுத்துக் கொண்டலும் இவர்களுக்கு துன்பம் மட்டுமே இருந்து வந்தது. அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டு துலாம் ராசியினருக்கு குபேர யோகமானது இவர்களுக்கு ஒரு நிலையான வாழ்க்கையை அமைத்து கொடுக்க போகிறது. நினைத்த பொருட்களை வாங்கி மகிழும் யோகம் உண்டாகும்.
மகரம்:
மகர ராசிகினருக்கு நிச்சயம் இந்த 2026 ஆம் ஆண்டு அவர்கள் வாழ்க்கையில் ஒரு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்க காத்திருக்கிறது.
நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாமல் தாமதித்து கொண்டு இருப்பவர்களுக்கு நிச்சயம் நல்ல வரன் அமையும். அது மட்டுமல்லாமல் இவர்கள் வீடு வாகனம் வாங்கும் யோகம் அமையும்.
வேலை செய்யும் இடங்களில் இவர்களுக்கு ஒரு நல்ல மரியாதையும் மதிப்பும் பெருக போகிறது. பணம் இன்று எடுத்துக் கொண்டால் நிச்சயம் இவர்களுக்கு இந்த வருடம் எந்த ஒரு கஷ்டமும் வரப்போவதில்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |