வாழ்க்கையில் சுதந்திரத்தை அதிகம் விரும்பும் 4 ராசியினர்
நம் வாழ்க்கையில் சில நபரை பார்த்திருப்போம். அவர்களை யாரும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது. சுதந்திரத்தை முழுமையாக விரும்பக்கூடிய மற்றும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று எண்ணக்கூடிய நபராக இருப்பார்கள்.
ஜோதிட ரீதியாக எடுத்துக் கொண்டால் சிலர் இயல்பாகவே சுதந்திரத் தன்மை கொண்டவர்கள். அவர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அப்படியாக வாழ்க்கையில் சுதந்திரத்தை அதிகம் விரும்பும் ராசியினர் யார் என்று பார்ப்போம்.
தனுசு
தனுசு ராசியினர் எப்போதும் மனதையும் அவர்கள் வாழ்க்கை சூழலையும் இயல்பாக வைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். இவர்களை கட்டுப்படுத்தும் படியாக வார்த்தைகள் பயன்படுத்தினாலே இவர்களுக்கு பிடிக்காது. இவர்களுக்கு இந்த உலகத்தைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும், அதேபோல் புதிதாக இவர்களும் தேடி நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள்.
மிதுனம்
மிதுன ராசியினர் எப்பொழுதும் தனக்கு பிடித்ததை செய்து பார்த்து மகிழ வேண்டும் என்று நினைப்பவர்கள். எவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும் தனக்கு பிடித்ததை செய்வதை இவர்கள் தவறுவதில்லை. இவர்களுக்கு சுதந்திரமாக தனக்கு பிடித்த விஷயங்களை செய்தால் மட்டுமே மனதில் மகிழ்ச்சி உண்டாகிறது.
மேஷம்
மேஷ ராசிக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் தனக்கான அங்கீகாரத்தையும் தேடிக் கொண்டிருக்கும் நபர்கள். ஆதலால் இவர்கள் வாழ்க்கையை நோக்கிய பயணத்தை தனியாகவும் சுதந்திரமாகவும் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள். இவர்களிடம் அன்பால் கூட நாம் சில கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது. இவர்கள் சுதந்திரத்திற்கு இடையூறுகள் ஏற்பட்டால் அந்த உறவையே துண்டிக்கும் அளவிற்கு இவர்கள் முன் வருவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியினர் எப்பொழுதும் தனக்கு நானே ராஜா என்று எண்ணி வாழ்பவர்கள். இவர்களை எந்த காரணத்தைக் கொண்டும் சமாதானம் செய்யவும் ஒரு விஷயத்திற்கு அவர்களை தன் பக்கம் இழுக்கவும் சாத்தியமற்றது ஆகும். இவர்கள் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் அவர்கள் மனதிற்கு சரி என்று படுகிறதா என்று பார்ப்பார்களே தவிர பிறரிடம் சென்று ஆலோசனை கேட்டு தான் அந்த விஷயம் செய்ய வேண்டும் என்று நினைக்க விரும்பாதவர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







