2025 கிருஷ்ண ஜெயந்தி: பூஜை செய்ய உகந்த நேரம்

By Sakthi Raj Aug 15, 2025 05:32 AM GMT
Report

விஷ்ணு அவதாரத்தில் எட்டாவது அவதாரமான கிருஷ்ண அவதாரம் மிகவும் முக்கியமான அவதாரமாக பார்க்கப்படுகிறது. மேலும் கிருஷ்ணர் பூமியில் உதித்த தினத்தை நாம் ஒவ்வொரு வருடமும் கிருஷ்ண ஜெயந்தியாக மிக விசேஷமாக கொண்டாடுகின்றோம். கிருஷ்ண பகவான் உத்திர பிரதேசம் மதுராவில் வாசுதேவர் மற்றும் தேவகிக்கு எட்டாவது குழந்தையாக அவதரித்தார்.

கிருஷ்ண பகவான் பிறந்த பொழுதே நிறைய துன்பங்களோடு பிறந்தார். அதாவது அவர் பிறந்த வேளையில் அவருடைய தாய் தந்தையரை கிருஷ்ண பகவானுடைய தாய்மாமன் கம்சன் சிறையில் அடைத்து வைத்திருந்தான்.

அதாவது தேவகிக்கு பிறந்த எட்டாவது குழந்தை கம்சன் ஆட்சிக்கு சில இடையூறுகளை ஏற்படுத்தலாம் என்றும், ஏன் அந்த குழந்தையால் கம்சனுடைய ஆட்சியே முடிவிற்கு வரும் என்று ஒரு தீர்க்கதரிசி கூறி இருந்தார். அதை தடுக்கவே கிருஷ்ண பகவான் பிறப்பதற்கு முன்பாக தேவகிக்கு பிறந்த ஆறு குழந்தைகளையும் கம்சன் கொன்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

2025 கிருஷ்ண ஜெயந்தி: பூஜை செய்ய உகந்த நேரம் | 2025 Krishna Jeyanthi Pooja Timing In Tamil

இந்த நேரத்தில் தான் கிருஷ்ண பகவான் அவதரிக்கிறார். அவர் பிறந்தவுடன் ஒரு தெய்வீக ஆற்றலை சிறை காவலர்களால் உணர முடிந்தது. அதோடு கிருஷ்ணர் பிறந்த வேளையில் கிருஷ்ணர் வாழ வேண்டும் என்று எண்ணிய அவருடைய தந்தை வாசுதேவர் தனது குழந்தையை யமுனை நதியைத் தாண்டி கோகுலத்தில் உள்ள நந்தரிடம் கொண்டு சென்றார்.

நந்தரும் அவரது மனைவியும் ஆன யசோதாவும் கிருஷ்ணரை தங்களுடைய தத்துப் பிள்ளையாக எடுத்து வளர்த்தனர். அதன் பிறகு கிருஷ்ண பகவான் வளர்ந்து கம்சனை பதம் செய்தார். அப்படியாக கிருஷ்ண பகவான் இந்த பூமியில் அவதரித்த நாள் முதல் பல லீலைகளை செய்துள்ளார்.

வரங்களை அள்ளி கொடுக்கும் குடியாத்தம் கங்கை அம்மன்

வரங்களை அள்ளி கொடுக்கும் குடியாத்தம் கங்கை அம்மன்

எவர் ஒருவர் கிருஷ்ண பகவானை சரணடைகிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் துன்பமே இல்லாத இனிமையான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆனது ஆகஸ்ட் 16 தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் பக்தர்கள் கிருஷ்ண பகவானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். அதிலும் இரண்டு விதமான விரதங்களை பக்தர்கள் கடைபிடிக்கிறார்கள். ஒன்று நிர்ஜலா எனும் தண்ணீர் உணவு எதுவும் இல்லாத ஒரு விரதத்தையும், பலஹார் என்று பலம் பால் தயிர் போன்ற எளிய உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டு விரதங்களை கடைப்பிடிக்கிறார்கள்.

2025 கிருஷ்ண ஜெயந்தி: பூஜை செய்ய உகந்த நேரம் | 2025 Krishna Jeyanthi Pooja Timing In Tamil

 தர்ம சாஸ்திரப்படி, நோன்பு இருப்பவர்கள் ஆகஸ்ட் 16 இரவு 9.34 மணிக்கு முடிக்கலாம். சில பாரம்பரிய வழக்கங்கள் படி அதிகாலை 5.51 மணி வரை விரதத்தை நீடிப்பார்கள். நவீன வழக்கப்படி, நிஷித பூஜை முடிந்தவுடன் (அதிகாலை 12.47 மணி) நோன்பு முடிக்கப்படுகிறது.

மேலும் கிருஷ்ண ஜெயந்தி அன்று பக்தர்கள் கிருஷ்ணருடைய பஜனை பாடல்கள் பாடுவதும், பகவத் கீதை பாராயணம் செய்தல், ஆலயம் சென்று தரிசனம் செய்தல் ஆன்மீக செயல்களில் ஈடுபடுதல் போன்ற விஷயங்களில் தங்களை ஈடுபடுத்துவார்கள்.

அதோடு இரவு 12 மணிக்கு கிருஷ்ண பகவானுடைய பிறப்பு கொண்டாட்டமான ஜன்மோற்சவம் நடைபெறும். சில இடங்களில் கிருஷ்ணர் ஜெயந்தி அன்றுபல விழாக்களும் நடத்தப்படும். குறிப்பாக தமிழ்நாட்டில் உரியடி விழா நடத்தப்படும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US