இந்த 4 ராசிகளால் ஒருவருடைய ரகசியத்தை பாதுகாக்கவே முடியாதாம்
ஜோதிடத்தை பொருத்தவரை ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு. அப்படியாக, ஒரு சில ராசியில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே அவர்களால் மனதிற்குள் எதையும் வைத்துக்கொள்ள முடியாது.
யாரிடமாவது பகிர்ந்து விட வேண்டும். அந்த வகையில் இந்த ராசிகளிடம் நாம் ரகசியத்தை சொல்வதை தவிர்ப்பது நல்லது. அந்த வகையில் எந்த ராசிகளிடம் நாம் ரகசியத்தை சொன்னால் அவர்களால் பாதுகாக்கவே முடியாது என்பதை பற்றி பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசியை பொறுத்தவரை நாம் எந்த காலகட்டங்களிலும் அவர்களிடம் ஒரு ரகசியத்தை சொல்லவே கூடாது. இவர்களால் ஒரு விஷயத்தை மனதிற்குள் வைத்துக்கொள்ளவே முடியாது. யாரிடமாவது நெருங்கி பேசுகிறார்கள் என்றால் அவர்கள் மனதில் இருக்கக்கூடிய எல்லா விஷயங்களையும் அவர்கள் கொட்டி தீர்த்து விடுவார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியை பொறுத்தவரை இவர்கள் தற்பெருமைக்காக நிறைய விஷயங்கள் செய்வது உண்டு. ஆதலால், இவர்கள் ஒருவரிடம் சொன்ன ரகசியத்தை என்னிடம் இதை இவர்கள் பகிர்ந்து கொண்டார்கள் என்று விளையாட்டு போக்காக மற்றவர்களிடம் சொல்லுவது உண்டு.
மீனம்:
மீன ராசியை பொறுத்தவரை இவர்களிடம் யாரிடமும் நான் சொல்லக்கூடிய ரகசியத்தை சொல்லிவிடாதீர்கள் என்று சொன்னால் அவர்கள் முதல் வேலையாக அந்த ரகசியத்தை ஒருவரிடம் சென்று சொல்லிவிடுவார்கள். ஆதலால் மீன ராசியினரிடம் நாம் முடிந்தவரை ரகசியத்தை சொல்லாமல் இருப்பது நல்லது.
கடகம்:
கடக ராசியை பொறுத்தவரை இவர்கள் குடும்பத்தினரிடம் எதையும் மறைக்க மாட்டார்கள். அதனால் இவர்களிடம் சொல்ல கூடிய ரகசியத்தை இவர்கள் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஆவது பகிர்ந்து கொள்ளக்கூடிய நிலை உருவாகிறது. ஆதலால் கவனமாக பகிர்ந்து கொள்வது அவசியம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |