குலதெய்வம் சாபம் இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் என்ன?

By Sakthi Raj Jul 18, 2026 09:04 AM GMT
Report

நாம் இந்த உலகத்தில் எந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்தாலும் குலதெய்வத்தை மறந்து விட்டால் நிச்சயம் நமக்கு முழு இறை அருள் கிடைத்ததில்லை. அப்படியாக, ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் குலதெய்வம் கட்டாயம் இருக்கும்.

அந்த வகையில், குலதெய்வத்தினுடைய சாபம் அல்லது கோபம் அந்த குடும்பத்தினர் மீது இருக்கிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகளை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம். குடும்பத்தில் குலதெய்வம் சாபம் இருக்கிறது என்றால் அந்த குடும்பத்தில் தம்பதிகள் இடையே ஒற்றுமை இருக்காது.

குலதெய்வம் சாபம் இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் என்ன? | Kuladeivam Curse Sign In Tamil

குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்ற பொழுது அந்த திருமணத்தில் விரிசல் உண்டாகும். அதைப்போல், குழந்தைபேறு விஷயங்களில் தாமதம் நடக்கும். குடும்பமாக சென்று குலதெய்வ வழிபாடு செய்ய முடியாது.

வீழ்ந்தாலும் மீண்டும் வருவது எப்படி? அனுமன் உணர்த்தும் பாடம் என்ன?

வீழ்ந்தாலும் மீண்டும் வருவது எப்படி? அனுமன் உணர்த்தும் பாடம் என்ன?

குடும்பம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊர்களில் பிரிந்து இருப்பார்கள், ஒற்றுமையாக இருப்பதற்கான நிலையை ஏற்படாது. இதற்கெல்லாம் ஒரு சாபம் அந்த வீட்டில் ஆட்கொண்டு இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

குலதெய்வம் சாபம் இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் என்ன? | Kuladeivam Curse Sign In Tamil

இதிலிருந்து விடுபடுவதற்கு குடும்பத்தினருடைய பெண் பிள்ளைகளை மகிழ்ச்சியாக வைப்பது அவசியமாக இருக்கிறது. அதேபோல் குலதெய்வம் ஆலயத்திற்கு சென்று அங்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்வதும் நமக்கு நல்ல பலன்களை கொடுக்கிறது.

அதேபோல், குடும்பத்தில் இறந்த முன்னோரக்ளுக்கு நாம் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வதும் அவசியமாக இருக்கிறது. இதையெல்லாம் செய்கின்ற பொழுதுதான் நமக்கு அந்த சாபம் விலகி குடும்பத்தில் இருக்கக்கூடிய குழந்தைகள் வாழ்க்கை நல்ல முறையில் முன்னேற்றம் பெறும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்ணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US