12 ராசிகளில் அதிக ஞாபகம் மறதி உள்ள ராசிகள் யார் தெரியுமா ?
ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரன் தான் மனதைகுறிக்க கூடியவராக இருக்கிறார். அந்த வகையில் ஜோதிட ரீதியாக எந்த ராசிகளுக்கு அதிக அளவில் ஞாபக மறதி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
மீனம்:
இவர்கள் ஒரு பொருளை வைக்கும் இடம் ஒன்றாக இருக்கும் ஆனால் தேடுவது வேறு ஒரு இடமாக இருக்கும். காரணம், இவர்கள் எப்பொழுதும் ஏதேனும் யோசித்துக் கொண்டே இருப்பதால் பல நேரங்களில் இவர்கள் முக்கியமான விஷயங்களை மறந்து விடுகிறார்கள்.
தனுசு:
தனுசு ராசியிடம் ஒரு விஷயத்தை சொன்ன நிமிடத்தில் மறக்க கூடியவர்களாக இருக்கிறார். அவர்களிடம் இதை நீ ஞாபகமாக வைத்துக் கொள் என்று ஒரு விஷயத்தை சொன்னால் அதை அவர்கள் முற்றிலுமாக மறந்து விடுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

மிதுனம்:
மிதுன ராசியினர் ஒரு விஷயத்தை கட்டாயம் நாம் மறந்து விடக்கூடாது என்று மனதில் வைத்துக் கொள்ள ஆசைப்படுவார்கள். ஆனால் இவர்கள் ஒருநாள் தூங்கி எழுந்ததும் மறுநாள் அதை மறந்து விடுவார்கள். காரணம் இவர்கள் எப்பொழுதும் எதையும் முக்கியத்துவமாக எடுத்துக் கொள்வதில்லை.
கடகம்:
கடக ராசியை பொறுத்தவரை இவர்கள் ஒரு விஷயத்தை பேசும் பொழுதே அதை மறந்து விடக் கூடிய தன்மை கொண்டவர்கள். அதாவது மிக எளிதாக ஒரு விஷயத்தை மறக்கக் கூடிய தன்மை இந்த கடக ராசியினருக்கு உண்டு. இவர்களால் எதையும் எப்பொழுதும் நிறைய மெனக்கிடல்களோடு செய்ய பிடிப்பதில்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |