கீதா உபதேசம்: நிம்மதியான வாழ்க்கைக்கு கட்டாயம் இந்த 5 விஷயங்களை பின்பற்றுங்கள்
பகவத்கீதை என்பது இந்த உலகம் இருக்கும் வரை ஒருவரை வழிநடத்தக்கூடிய ஒரு அற்புதமான வழிகாட்டுதல் ஆகும். பகவான் கிருஷ்ணர் அருளிய இந்த பகவத்கீதை மனித வாழ்க்கை எந்த கணக்கில் இயங்குகிறது? யார் எதை செய்தால் அவர்களுக்கு என்ன வந்து சேரும்?
யார் என்னை செய்தால் புண்ணியம் வந்து சேரும் என்று பல்வேறு விஷயங்களை நமக்கு அவர் கற்றுக்கொடுத்து வழி நடத்துகிறார். அப்படியாக, கீதா உபதேசத்தில் பகவான் கிருஷ்ணர் நமக்கு நிம்மதியான வாழ்வை வாழ்வதற்கு ஒரு சில வழிகளை சொல்லி இருக்கிறார். அதைப்பற்றி பார்ப்போம்.

1. உங்களை சுற்றி ஒருவர் துன்பத்தில் இருக்கிறார் என்றால் உடனே அவர்களை சென்று பார்த்து விடுங்கள். ஆனால், செல்வ செழிப்போடு ஒருவர் இருக்கிறார் என்றால் அவர்கள் அழைத்தால் மட்டுமே சென்று பாருங்கள். இல்லையென்றால் அங்கு அவமானம் மட்டுமே மிஞ்சும்.
2.ஒருவருக்கு பணம் இருந்தால் அவர்களுக்கு அவர்களே தெரியாது. ஆனால், ஒருவரிடம் பணம் இல்லை என்றால் அவர்கள் இந்த உலகத்தில் யாருக்கும் தெரியாது. இதுதான் பணம் ஒரு மனிதனுக்கு கொடுக்கக்கூடிய மதிப்பு.
3. மனிதன் வெற்றியில் ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வது என்பது சுலபம். ஆனால், அவன் தோல்வி வருகின்ற பொழுது அவன் எந்த நிலையில் இருக்கின்றான் என்ன கற்றுக் கொள்கிறான் என்பது தான் அவனுடைய உண்மையான வெற்றியை தீர்மானிக்கிறது.

4. பொதுவாக மனிதர்கள் உயிரோடு இருக்கும் வரை யாரும் அவர்களை மதிப்பதில்லை. பல விஷயங்கள் காலம் கடந்து தான் மனிதர்களுக்கு புரிகிறது.
5. ஒரு மனிதனுக்கு எளிமை அடக்கம் இவை இரண்டு மட்டுமே கொண்டு அவனை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அதுவே அவனுக்கு கை கொடுக்கக் கூடிய புண்ணியமாக இருக்கிறது.
ஆக, பகவான் கிருஷ்ணர் சொன்ன இந்த விஷயங்களை நம்முடைய வாழ்க்கையில் பின்பற்றினாலே பாதி துன்பத்திலிருந்து நாம் தப்பித்து விடலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |