ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலக சக்தி வாய்ந்த 5 வெற்றிலை பரிகாரம்
நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் வெற்றிலை மிகவும் மங்களகரமான பொருளாக பார்க்கப்படுகிறது. பல தெய்வ வழிபாடுகளிலும் பரிகாரங்களிலும் வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது.
அப்படியாக, நாம் நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கக்கூடிய முக்கியமான பிரச்சினைகளிலிருந்து விடுபட வெற்றிலை வைத்து எவ்வாறு பரிகாரம் செய்து வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
1. பண வரவு பெருக :
வீடுகளில் பொருளாதார கஷ்டங்கள் இருக்கிறது என்றால் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி படத்திற்கு முன்பாக இரண்டு வெற்றிலை வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் அந்த வெற்றிலையை மரத்தின் அடியில் வைத்துவிடலாம்.

2. திருமணம் தடை நீங்க:
தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் அம்மன் கோவிலில் 9 வெற்றிலை ஒன்பது பாக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வருகின்ற பொழுது திருமண தோஷம் விலகி விரைவில் திருமணம் நடைபெறும்.
3. திருஷ்டி நீங்க:
தேவையில்லாத திருஷ்டிகள் மட்டும் எதிர்மறை ஆற்றல்கள் சூழ்ந்து இருந்தால் மூன்று வெற்றிலைகளில் சிறிதளவு கற்பூரம் வைத்து அந்த நபரை மூன்று முறை சுற்றி எரித்து விட வேண்டும் என்பது பாரம்பரிய நம்பிக்கையாக இருக்கிறது.

4. பகை விலக:
ஒருவரிடம் தேவையில்லாத பகை ஏற்பட்டுவிட்டது அதனால் மன துயரம் கொள்கிறது என்றால் செவ்வாய்க்கிழமைகளில் முருகன் கோவிலில் ஒரு வெற்றிலை மாலை சமர்ப்பித்து வழிபாடு செய்தால் அந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
5. மன அமைதி பெற:
வாழ்க்கையில் தேவை இல்லாத குழப்பங்களால் மன அமைதி இழந்து காணப்படும் பொழுது "ஓம் கணபதியே நமஹ" என்று விநாயகருக்கு வெற்றிலை சாற்றி 108 முறை பாராயணம் செய்ய நம்முடைய கவலைகள் விலகும். இந்த வழிபாடுகளை நம்பிக்கையாக செய்யும்பொழுது வாழ்க்கை வளமாக மாறும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |