சாணக்கிய நீதி: வீடுகளில் பணம் பெருக செய்ய வேண்டிய 5 விஷயங்கள்

By Sakthi Raj Mar 28, 2026 08:42 AM GMT
Report

 மனிதர்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்றாக பணம் இருக்கிறது. இந்த பணத்தை நாம் சரியாக சேமிக்கவும் சரியாக செலவு செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.

அப்பொழுதுதான் பணம் நம் கைகளில் தங்குகிறது. பண்டைய காலத்தில் மனிதர்களுக்கு தேவையான அனைத்து அறிவுரைகளையும் அவருடைய அறிவாலும் பக்குவத்தாலும் எடுத்துச் சொன்னவர் சாணக்கியர். அப்படியாக அவர் பண பெருக முக்கியமான சில வழிமுறைகள் சொல்கிறார். அதை பற்றி பார்ப்போம்.

சாணக்கிய நீதி: வீடுகளில் பணம் பெருக செய்ய வேண்டிய 5 விஷயங்கள் | 5 Chanakya Niti To Attract Wealth At Home

2026 காமதா ஏகாதசி: விருப்பங்கள் நிறைவேற தானம் செய்யவேண்டிய 5 பொருட்கள்

2026 காமதா ஏகாதசி: விருப்பங்கள் நிறைவேற தானம் செய்யவேண்டிய 5 பொருட்கள்

1. எப்பொழுதுமே நம்முடைய நிலை அறிந்து வாழ வேண்டும். ஆசை அதிகமாக இருக்கிறது என்பதற்காக ஆடம்பர செலவுகளை செய்தால் நிச்சயம் பண இழப்பு உண்டாகும். நமக்கு தேவையானதை தகுதிக்கு தகுந்தாற்போல் வாங்கி செலவு செய்வதற்கு பழகினால் நிச்சயம் பணம் கைகளில் தங்கும் என்று சொல்கிறார்.

2. பணம் சம்பாதிப்பது மிகவும் எளிது. ஆனால் சம்பாதிக்கும் பணத்தை நாம் மதிக்க தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக பத்து ரூபாய் செலவழிக்கின்றோம் என்றால் அந்த பத்து ரூபாயை நாம் மீண்டும் பெற்று விட முடியுமா என்கின்ற யோசனை இருக்க வேண்டும். அவ்வாறு பணத்தின் உடைய மதிப்பு தெரிந்தவர்கள் இடத்தில பணம் தங்குகிறது என்று சொல்கிறார்.

3. மனிதனுக்கு அன்றாட வாழ்க்கைக்கு பணம் அவசியம் தான். ஆனால் அதை நாம் உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேர்மையற்ற வழியில் சம்பாதிக்கக்கூடிய பணமானது கட்டாயம் நம் கைகளில் தங்காது . அதைவிட தேவை இல்லாத செலவுகளையும் அவை நமக்கு கொடுத்து விடும் என்று சொல்கிறார்.

சாணக்கிய நீதி: வீடுகளில் பணம் பெருக செய்ய வேண்டிய 5 விஷயங்கள் | 5 Chanakya Niti To Attract Wealth At Home

வாஸ்து: வீடுகளில் இந்த பொருட்கள் இருந்தால் முதலில் அகற்றி விடுங்கள்

வாஸ்து: வீடுகளில் இந்த பொருட்கள் இருந்தால் முதலில் அகற்றி விடுங்கள்

4. பணம் சம்பாதிக்கின்றோம் என்றால் நிச்சயம் அதை சேமிக்க பழக வேண்டும். சேமிக்கும் பொழுது என்றோ ஒருநாள் நமக்கு அவசரமாக தேவைப்படும் பொழுது அந்த பணமானது நமக்கு உதவியாக அமையும். இன்று கைகளில் பணம் இருக்கிறது என்று அதை நாம் செலவு செய்து விட்டால் நிச்சயம் எதிர்காலத்தில் உதவியாக இருக்கும்.

5. நம்முடைய வாழ்க்கையில் கஷ்டம் என்பது இயல்பாக வரக்கூடியது. அந்த வகையில் ஒருவர் இக்கட்டான நிலையில் பண கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு நாம் பணம் கொடுத்து உதவும் பொழுது நாளை நமக்கு துன்பம் என்கின்ற நேரத்தில் யாரோ ஒருவர் வழியாக நாம் செய்த உதவி நமக்கும் வந்து சேரும். ஆதலால்தானம் கொடுத்து வாழும் பொழுது நிச்சயம் அந்த பலன் நமக்கு நன்மையை செய்யும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US