மகாசிவராத்திரி 2025:வேண்டுதல்கள் நிறைவேற நாம் செல்லவேண்டிய 5 சிவன் கோயில்
வருகின்ற பிப்ரவரி 26 மகாசிவராத்திரி கொண்டாடப்டுகிறது.அன்று இரவு முழுவதும் கண் விழித்து வழிபாடு செய்வதால் ஏராளமான நன்மைகள் பெறலாம்.அப்படியாக அன்று பலரும் சிவன் ஆலயம் சென்று வழிபாடு செய்வார்கள்.அப்படியாக சிவபெருமான் முழு அருளை நாம் செல்லவேண்டிய முக்கியமான ஆலயங்கள் பற்றி பார்ப்போம்.
காசி விஸ்வநாதர் கோவில்:
சிவபெருமானின் முக்கிய ஆலயங்களில் காசி விஸ்வநாதர் ஆலயமும் ஒன்று.காசியில் சிவன் பெருமான் குடிகொண்டிருப்பதாக ஐதீகம்.ஆதலால் காசிக்கு சென்று வழிபாடு செய்ய நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறுவதோடு நம்முடைய பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.ஆக வாழ்நாளில் ஒருமுறையாவது காசி சென்று வழிபாடு செய்வது நமக்கு சிறந்த புண்ணிய பலன்களை சேர்க்கும்.
உஜ்ஜைனி மகாகாலேஸ்வரர் கோவில்:
இந்தியாவில் மிக மிக முக்கியமான கோயில்களில் உஜ்ஜைனி மகாகாலேஸ்வரர் கோவிலும் ஒன்று.இங்கு செல்ல எப்பேர்ப்பட்ட கெட்ட காலங்களும் விலகி நல்ல காலமாக மாறும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கை.இக்கோவிலில் சிவ பெருமான் லிங்க வடிவில் உறைந்திருப்பதாக நம்பப்படுகிறது.இங்கு குறிப்பாக சிவராத்திரி அன்று வழிபாடு செய்ய நாம் நினைத்த காரியம் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்:
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், மிக முக்கியமான ஆன்மிக தலங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது திருவண்ணாமலை.இங்கு சிவபெருமானே மலை வடிவமாக இருந்து அருள் பாலிக்கிறார் என்று நம்பப்படுகிறது. மகா சிவராத்திரி அன்று பக்தியுடன் அருணாச்சல மலையை வலம் வந்து வழிபடுபவர்களுக்கு ஈசன் அனைத்து நலன்களையும் வழங்குவார் என்பது ஐதீகம்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில்:
தமிழ்நாட்டில் சிறப்பு மிகுந்த ஆலயங்களில் ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி ஆலயம் ஒன்று.இங்கு சென்று வழிபாடு செய்து வர நிச்சயம் நம் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்களை காணமுடியும்.அதில் மஹாசிவராத்திரி அன்று ராமநாதசுவாமி ஸ்வாமியை தரிசிக்க நம்முடைய தடைகள் விலகி பாவங்கள் தீரும்.
ஸ்ரீராம பிரானே தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் நீங்க, தன்னுடைய திருக்கரங்களால் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலமாகும்.ஆக இது மிகவும் சக்தி வாய்ந்த தலமாக சொல்லப்படுகிறது.
உத்திரகோசமங்கை சிவன் கோவில்:
உலகில் முதன் சிவன் கோயிலில் உத்திரகோசை மங்கை முதல் கோயில் என்று போற்றப்படுகிறது.இங்குள்ள ஈசனையும், மரகத நடராஜரையும் தரிசனம் செய்தாலே பிறவிப் பிணிகள் அனைத்தும் நீங்கி, வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் வரும் என்பது நம்பிக்கை. இங்கு செல்வதே மிக பெரிய பாக்கியம் என்று கருதப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |