சனி பகவானின் அருள் உங்களுக்கு இருப்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள்
இந்துமதத்தில் மிகவும் முக்கிய கிரகமாக விளங்கக்கூடியவர் சனிபகவான்.இவரின் பார்வை ஒவ்வொரு ராசிக்கும் ஒருவித தாக்கத்தை உண்டாக்கும்.மேலும்,சனி பகவான் போல் ஒரு மனிதனுக்கு பாடம் கற்பிக்க யாராலும் முடியாது.பொதுவாக,உங்கள் ஜாதகத்தில் சனி பகவான் பலமாக இருந்தால் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான விஷயங்கள் நடக்கும்.
அதே,சனி பலவீனமாக இருந்தால், நீங்கள் வாழ்க்கையில் சில சவால்களை சந்திக்ககூடும்.அப்படியாக ஜாதக ரீதியாக சனிபகவான் ஒருவருக்கு நல்லது செய்கிறார் என்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள் பற்றி பார்ப்போம். சனி பகவானின் மூன்று, ஏழு, பத்து ஆகிய இடங்கள் முக்கியமானவை.
இதில் மூன்றாம் இடத்து சனியின் பார்வை தான் ஒருவருக்கு கடினமான காலத்தை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.ஆனால், சனி உங்கள் ஜாதகத்தில் அதிபதியாகவோ அல்லது உச்சமாகவோ இருந்தால்,அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. உங்கள் வாழ்வில் மிக பெரிய பிரச்சனை வந்தாலும் அதை எளிதாக சமாளித்து விடுவீர்கள்.
அதுவே சனி பகவான் ஜாதகத்தில் ஏழாவது மற்றும் பத்தாவது வீடுகளில் சுபமாக இருந்தால்,அது அந்த தனி நபரின் குடும்ப வாழ்க்கை மற்றும் வேலையில் வெற்றிகளை குறிக்கிறது. மேலும்,நம்முடன் இருப்பவர்கள் மிகவும் எளிமையாகவும் அனைவர்க்கும் அன்பை காட்டும் விதமாக அமைந்து இருந்தால் அவர் ஜாதகத்தில் சனி பலமாக இருப்பதை அறிந்துகொள்ளலாம்.
சனிபகவான் ஒரு நல்ல மனிதரை இன்னும் நல்ல மனிதனாக உருவாக்குகிறார்.அதாவது அந்த மனிதர் நிதி நேர்மை நியாயமாகவும்,அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவராகவும் யாரிடமும் பாகுபாட்டை விரும்பாத ஒரு நல்ல எண்ணம் கொண்ட மனிதராக இருப்பார்.
சனி பகவானின் அருள் ஒருவருக்கு இருந்தால் கட்டாயம் கால தாமதம் ஆகினாலும் அவர்களின் வெற்றியின் உச்சத்தை அடைவார்.அவர்களிடம் நிச்சயம் எந்த ஒருவித ஆடம்பரம் மற்றும் ஆணவத்தை பார்க்கமுடியாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |