கெட்டது நடக்கப்போகிறது என்பதை உணர்த்தும் 5 சகுனங்கள்
மனிதன் வாழ்வில் ஒரு நல்ல விஷயம் நடக்கப்போகிறது என்றால் அதற்கான அறிகுறியும் அதே போல் கெட்ட விஷயங்கள் நடக்க போகிறது என்றால் அதற்கான சகுனங்களும் நமக்கு இந்த பிரபஞ்சம் கொடுத்து கொண்டு தான் இருக்கிறது.அதை நாம் கவனமாக கவனிப்பதும் தவறவிடுவதும் ஒவ்வொருவருடைய நேரம் பொறுத்தே அமைகிறது.
அப்படியாக நம் வாழ்க்கையில் நல்லது நடந்தால் மனதிற்கு மகிழ்ச்சியே தவிர இழப்புகள் இல்லை.ஆனால் கெட்டது நடந்து விட்டால் அது மனஉளைச்சல் என்று மனதை வாட்டி வதைத்து விடும்.அப்படியாக ஒருவருக்கு கெட்ட விஷயங்கள் நடக்கப்போகிறது என்பதற்கு அறிகுறியாக அமையும் 7 சகுனங்கள் பற்றி பார்ப்போம்.
1.சமயங்களில் நாம் முக்கிய காரணமாக வெளியில் செல்லும் பொழுது நடக்கும் தவறுகளை தடுக்கும் விதமாக கால் தடுக்குவது,தலை இடித்து கொண்டாலே அது மிகவும் கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது.அப்படியாக அவர்கள் சற்று அமர்ந்து கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு செல்வார்கள்.
2.நம் வீடுகளில் துளசி செடியை மஹாலக்ஷ்மி அம்சமாக பார்க்கின்றோம்.அப்படியாக நன்றாக தண்ணீர் ஊற்றி வளர்த்த செடி திடீர் என்று வாடி காணப்பட்டால் வீட்டில் ஏதெனும் பாதிப்புகள் உருவாகப்போகிறது என்று அர்த்தம்.
3.சிலர் இயல்பாகவே எதையும் எளிதாக தொலைப்பவராக இருப்பார்கள்.சிலர் அவர்களுடைய விஷயத்தை மிகவும் கவனமாக வைத்துக்கொள்ளும் பழக்கம் வைத்திருப்பார்கள்.அப்படியாக அவர்கள் திடீர் என்று பாதுகாப்பாக வைத்துக்கொண்ட விஷயம் தொலைந்து போனால் அவர்களை மிக பெரிய கண்டத்தில் இருந்து காப்பாற்றுகிறது என்று அர்த்தம்.
4.அதே போல வீடுகளில் செவ்வாய் வெள்ளிக்கிழமை எண்ணெய் அல்லது நெய் கை தவறி கீழே விழுந்தால் அதுவும் கெட்ட சகுனமாக சொல்லப்படுகிறது. இது போன்ற விஷயங்கள் நடக்கும் பொழுது ஜாக்கிரதையாக எதையும் கையாள வேண்டும்.
5.அதே போல் வீட்டில் பூஜை செய்யும் பொழுது கட்டாயம் ஆரத்தி காண்பிக்கும் பழக்கம் வைத்திருப்போம்.அப்படியாக நாம் கட்டாயம் வீடு முழுவதும் ஆரத்தி காண்பிக்க காண்பிக்க வேண்டும்.அப்பொழுது நம் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் விலகி நேர்மறை சக்திகள் பெருகும்.ஆனால் சமயங்களில் அது அணையும் பொழுது நம் வாழ்க்கையில் ஏதோ ஒரு விஷயத்தை கவன தவறிவிட்டோம் என்பதை குறிக்கிறது.
ஆக,பிரபஞ்சம் மனிதர்களை கவனித்து கொண்டு இருக்கிறது.ஒருவர் தர்மம் செய்திட அவர்களுக்கு ஏதேனும் பெரிய பாதிப்புகள் ஏற்படும் பொழுது அவர்களை காப்பாற்ற முன் வந்து நிற்கிறது.அதனால் விழிப்புடன் இருப்போம்.பிரபஞ்சம் உணர்த்தும் அறிகுறிகளை கவனித்து நிதானமாக செயல்படுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |