பிரச்சனைகள் தீர உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்யலாமா?கூடாதா?

By Sakthi Raj Feb 05, 2025 09:32 AM GMT
Report

மனிதன் என்றால் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும்.அப்படியாக ஒரு மனிதனுக்கு அளவிற்கு அதிகமான பிரச்சனைகள் வரும் பொழுது அவன் மனம் தேடுவது இறைவனை தான்.மனிதன் அவன் வாழ்க்கையில் ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு கடவுள்களை வழிபாடு செய்யவேண்டும்.

அதாவது திருமணம் என்றால் முருக பெருமான்,பாவங்கள் தீர சிவபெருமான் மனதில் தைரியம் கிடைக்க அம்பாள் வழிபாடு,குலம் செழிக்க குலதெய்வம் வழிபாடு என்று ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபாடு செய்ய அதற்கேற்ற காலங்கள் இருக்கிறது.

பிரச்சனைகள் தீர உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்யலாமா?கூடாதா? | Can We Workship Ukira Deivangal

அப்படியாக நாம் கோபமாக இருக்கும் பொழுதோ அல்லது எதோ பிரச்சனைகளில் இருக்கும் பொழுதோ நிச்சயம் வழிபடக்கூடாத தெய்வங்கள் என்றால் அது உக்கிர தெய்வங்கள் தான்.அதாவது மனம் ஒருவர் தீயது செய்து விட்டார் என்று கொதித்து கொண்டு இருக்கும் வேளையில் உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்ய நம் மனதில் இன்னும் போர் குணங்கள் அதிகம் ஆகும் அமைதி இருக்காது.

குருவின் வக்கிர பயணம்.., அனைத்து செல்வங்களையும் அள்ளப்போகும் 3 ராசிகள்

குருவின் வக்கிர பயணம்.., அனைத்து செல்வங்களையும் அள்ளப்போகும் 3 ராசிகள்

ஆக பிரச்சனைகள் அதிகம் ஆகும் வேளையில் உக்கிர தெய்வங்களுடைய பாடல்கள் கேட்பதையும் மந்திரங்கள் சொல்வதையும் குறைத்து கொண்டாலே மனம் பதட்டம் அடைவது குறையும்.

அப்பொழுது நாம் உக்கிர தெய்வ வழிபாட்டை எப்பொழுது செய்யலாம் என்று கேட்டால் மனம் பலவீனம் அடைந்த நிலையில் தைரியம் வருவதற்கு செய்யலாமே தவிர்த்து அதிக அளவில் நாம் உக்கிர தெய்வங்களை மட்டுமே வழிபாடு செய்யும் பொழுது மனதில் போராட்டம் குணம்,அமைதி நிலவுவது குறைந்து விடும்.ஆதலால் தான் பலரும் உக்கிர தெய்வத்தை வழிபட சற்று தயக்கம் காட்டுகிறார்கள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US