திருமண பத்திரிக்கை அடித்த பிறகு தவறியும் இந்த 5 காரியங்கள் செய்யக்கூடாதாம்
ஒவ்வொரு வீடுகளிலும் சுப காரிய நிகழ்ச்சி நடப்பது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. ஒவ்வொரு சுபகாரிய நிகழ்ச்சிகள் பேச துவங்கிய நாள் முதல் அந்த காரியம் சரியாக முடிவடையும் வரை நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
அப்படியாக ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொருவர் குடும்பத்திலும் திருமண நிகழ்வு என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. அப்படியாக குடும்பத்தில் பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயம் முடிந்து திருமண பத்திரிக்கை அடித்த பிறகு நாம் தவறியும் சில காரியங்களில் ஈடுபடக் கூடாது என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

1. வீடுகளில் திருமண பத்திரிக்கை அடித்த பிறகு வீட்டிற்கு வந்தவுடன் எந்த ஒரு உயிர் பலியும் கொடுக்கக் கூடாது. அதாவது திருமணம் முடியும் வரை நாம் அசைவ உணவு சமைக்க கூடாது.
2. அதேபோல் திருமணம் பத்திரிகை அடித்த பிறகு நாம் இறப்பு வீட்டிற்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.
3. திருமண பத்திரிக்கை அடித்த பிறகு மணமக்கள் இருவரும் வெளியில் அதிகமாக சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
4. திருமண பத்திரிக்கை அடித்து முடித்த பிறகு குடும்பங்களுடன் சேர்ந்து குலதெய்வம் ஆலயம் சென்று வழிபாடு செய்வது என்பது மிகவும் அவசியமாகும்.
5. அதேபோல் திருமண பத்திரிக்கை அடித்த பிறகு குலதெய்வத்திற்கு சென்று படையல் இட்டு வணங்கி அவருக்கு முதலில் திருமண பத்திரிகையை சமர்ப்பித்த பிறகு தான் அனைவருக்கும் திருமண பத்திரிக்கையை கொடுக்க துவங்க வேண்டும்.

ஒருவர் வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெறுவது என்பது நிச்சயம் அந்த வீட்டினுடைய முன்னோர்களின் அருளாலும் குலதெய்வத்தின் அருளாலும் மட்டுமே நடக்கக்கூடியதாக இருக்கிறது. ஆக, தடையின்றி சுபகாரிய நிகழ்வுகள் நடைபெறுவதற்கு நாம் சில முக்கியமான விஷயங்களை பின்பற்றும் பொழுது எல்லாம் சுபமாக அமைகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |