வீடுகளில் அதிக தங்கம் சேர செய்ய வேண்டிய பின்பற்ற விஷயங்கள்
இந்த உலகத்தில் பிறந்த மனிதர்களாகிய எல்லோருக்கும் தங்கு நகைகளை சேர்க்க வேண்டும் என்ற ஒரு ஆசை கனவுகள் இருக்கும். அந்த வகையில், வீடுகளில் அதிக அளவில் தங்கம் சேர வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம்.
பொதுவாக, வெள்ளி தங்கம் மற்றும் ஆடைகள் வாங்குவதற்கு வியாழக்கிழமை உகந்தது. வியாழக்கிழமை அன்று பூச நட்சத்திரம் வருகின்ற நாளில் வாங்கினால் நமக்கு மென்மேலும் தங்கம் வெள்ளி ஆடைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.
அதைப்போல், சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நாம் ஒருபோதும் தங்கம் வாங்க கூடாது. அவ்வாறு வாங்கினால் தங்கம் நம்மிடம் தங்காது. அவை காணாமல் போவதற்கான வாய்ப்புகள் உண்டு.

அதேபோல் சனிக்கிழமைகளில் நாம் எப்போதும் புது ஆடைகள் வாங்குவது உடுத்துவதையும் நாம் தவிர்த்து விட வேண்டும். இவ்வாறு ஒரு சில விஷயங்களை மட்டும் நான் பின்பற்றினாலே வீடுகளில் தங்கு நகைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.
அதே போல், எப்பொழுதும் நம்மிடம் இருக்கக்கூடிய ஒரு சிறிய பொருளாக இருந்தாலும் அதை நாம் உதாசீனம் செய்யக்கூடாது. நாம் பணத்தையும் பொருட்களையும் உதாசீனம் செய்கின்ற பொழுது நம் வீடுகளை சில பொருள் இழப்புகள் வரலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |