பண கஷ்டம் தீர பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யவேண்டிய 5 பொருட்கள்

By Sakthi Raj May 16, 2025 09:23 AM GMT
Report

  நம்முடைய இந்து மதத்தில் வெள்ளிக்கிழமை என்பது மிகவும் விஷேசமான ஒன்றாகும். அன்றைய தினத்தில் நாம் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்தால் நம்முடைய குடும்பங்கள் மேம்படும் என்பது நம்பிக்கை.

பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்றால் அதற்கு முந்தைய நாளிலே நாம் வீடுகளை சுத்தம் செய்து வெள்ளிக்கிழமை அன்று பூஜைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் நாம் தயார் செய்து கொள்வோம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த வெள்ளிக்கிழமையில் நாம் மஹாலக்ஷ்மியின் அருளை பெற வீடுகளில் முக்கியமான 5 பொருட்களை வாங்கி வைத்து வழிபாடு செய்தால் நம்முடைய பொருளாதார கஷ்டங்கள் விலகுவதோடு, பண வரவு செழிப்பாக அமையும் என்கிறார்கள். அவை எந்த பொருட்கள் என்று பார்ப்போம்.

கனவுகளில் தண்ணீரை கண்டால் நன்மையா? தீமையா?

கனவுகளில் தண்ணீரை கண்டால் நன்மையா? தீமையா?

1. தாமரை விதைகள்: 

மஹாலக்ஷ்மி தேவிக்கு மிகவும் பிடித்தமான பொருட்களில் தாமரை விதைகளும் ஒன்று. அதனால் வெள்ளிக்கிழமை அன்று தாமரை தண்டு திரியில் நாம் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம். அதோடு தாமரை விதை மாலையை ஜெபம் செய்ய பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதின் வழியாக நம் வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சியும், வாழ்க்கையில் சமநிலையும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

2. ரோஜா அத்தர்:

ரோஜா மலரின் வாசனையும் லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அதனால் ரோஜா வாசம் கொண்ட ஊதுபத்தி ஏற்றி பூஜை அறையில் வைக்கலாம். இதுவும் வீடுகளில் அமைதியான சூழ்நிலையை உருவாக்கும்.

3. பாயசம்:

இறைவனுக்கு நெய்வேத்தியம் படைப்பது என்பது வழிபாட்டில் மிக சிறந்த ஒன்றாகும். பால் மற்றும் சர்க்கரை சேர்த்து ஏலக்காய், குங்குமப்பூ அல்லது உலர் பழங்கள் சேர்த்து செய்யப்படும் பாயசம் லட்சுமி தேவிக்கு பிடித்தமான பிரசாதம் ஆகும். இதை வைத்து வழிபாடு செய்வதால் மஹாலக்ஷ்மி தேவி மனம் மகிழ்ந்து நமக்கு ஆசீர்வாதத்தை வழங்குகிறாள்.

4. தாமரை மலர்:

 தாமரை மலர் மஹாலக்ஷ்மிக்கு மிகுந்த தொடர்பு கொண்டது. அதனால் தாமரை மலரை வைத்து வழிபாடு செய்வதால் நாம் மஹாலக்ஷ்மி தேவியின், முழு அருளை பெறுவதோடு நம்முடைய மனம் தெளிவடைந்து வீட்டில் செல்வம் பெறுகிறது.

5. நெய் விளக்கு:

வாழ்க்கையில் சந்திக்கும் எப்பேர்ப்பட்ட தடைகளும் வீடுகளில் நெய் விளக்கு ஏற்றினால் விலகுகிறது. அதனால் வெள்ளிக்கிழமையில் வீடுகளில் அகல் விளக்கில் நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் நாம் நினைத்த காரியம் மஹாலக்ஷ்மி தேவியின் அருளால் கிடைக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US