தூங்கும் பொழுது தலையணை கீழ் இந்த 5 பொருட்களை வைத்தால் வாழ்க்கையே மாறுமாம்
தூக்கம் என்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்றாகும். ஆனால் இந்த தூக்கமானது எல்லோருக்கும் சுலபமாக வருகிறதா என்று கேட்டால் கட்டாயம் இல்லை. சிலருக்கு தூக்கமே வராத நிலை பார்க்க முடியும். இதற்கு அவர்கள் மனதில் இருக்கக்கூடிய மன அழுத்தங்களும் அவர்களை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் சமயங்களில் காரணமாக உள்ளது.
ஆக ஒரு மனிதன் மறுநாள் எழுந்து தெளிவாக செயல்பட வேண்டும் என்றால் அவனுக்கு ஒரு நல்ல உறக்கம் தேவை. மனதில் ஆயிரம் கவலைகளை வைத்துக்கொண்டு தூங்க சென்றால் கட்டாயமாக நிம்மதியான உறக்கம் வராது.
அப்படியாக, நல்ல தூக்கம் பெறவும், வாழ்க்கையில் உள்ள துன்பம் விலகவும் நாம் தூங்கும் பொழுது தலையணைக்கு கீழ் குறிப்பிட்ட இந்த ஐந்து பொருட்களை வைத்துக்கொண்டு தூங்கினால் நமக்கு ஒரு நல்ல மாற்றம் வாழ்க்கையிலும் மனதிலும் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

1. செல்வத்தில் ஒரு மிகச்சிறந்த செல்வம் என்றால் அதில் ஏலக்காய் ஒன்று. ஆக நாம் தூங்கும் பொழுது தலையணைக்கிழ் சிறிது ஏலக்காய் வைத்து தூங்கினோம் என்றால் அந்த ஏலக்காயின் வாசனைத்தால் நம் மனம் புத்துணர்ச்சி அடைவதோடு நமக்கு ஒரு நல்ல அதிர்ஷ்டமும் கிடைக்கக்கூடும்.
2. விரலி மஞ்சள் ஆன்மீகத்திலும் மருத்துவ ரீதியாகவும் ஒரு மிகச்சிறந்த பொருளாக இருக்கிறது. ஆக தலையணைக்கு அடியில் விரலி மஞ்சள் வைத்து தூங்கும் பொழுது நமக்கு திருமண தடை மற்றும் திருமணத்தில் பிரச்சனை இருந்தால் விலகி ஒரு நல்ல வாழ்வு அமையும்.
3. மருத்துவ ரீதியாக கிராம்பு ஒரு மிகச்சிறந்த பொருள் என்று நமக்கு தெரியும். ஆனால் கிராம்பு ஆன்மீக ரீதியாக ஒரு மனிதனுக்கு ஒரு நல்ல தாக்கத்தை கொடுக்கக் கூடியது என்று பலருக்கும் தெரிவதில்லை.
அப்படியாக ஒரு சிலருக்கு கெட்ட கனவுகள் வந்து அவர்களுடைய தூக்கம் தடைபடுகிறது என்றால் அவர்கள் தூங்கும் பொழுது தலையணைக்கு கீழே கிராம்பு வைத்து படுக்கும் பொழுது அவர்களுக்கு எதிர்மறையான கனவுகள் வராமல் ஒரு நல்ல உறக்கம் கிடைக்கும்.

4. மருத்துவ துறையில் ஜாதிக்காய் பல நோய்களை குணப்படுத்த கூடியதாக இருக்கிறது. மேலும் ஆன்மீகத்தில் இந்த ஜாதிக்காய் மகாலட்சுமியின் அம்சமாக போற்றக்கூடியதாகவும் இருக்கிறது. இதை நாம் முகத்தில் தடவிக் கொள்ளும் பொழுது முகம் பளபளப்பாகும்.
அதே சமயம் இந்த ஜாதிக்காயை தலையணைக்கு அடியில் நாம் வைத்து தூங்கும் பொழுது பொருளாதார ரீதியாக சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அந்த சிக்கலில் இருந்து விடுபட ஒரு நல்ல வழி பிறக்கும்.
5. நாம் அனைவரும் அறிந்தது எலுமிச்சை பழம் ஒரு மிகப்பெரிய நேர்மறை ஆற்றல் மிக்கது என்று. இந்த எலுமிச்சை பழத்தை நாம் பூஜை அறையில் வைத்து பூஜித்து பிறகு அந்தப் பழத்தை தலையணைக்கு அடியில் வைத்து உறங்கும் பொழுது ஒரு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு நம்மை தீய சக்திகள் இடம் இருந்து பாதுகாக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |