தவறியும் இந்த ராசியினர் மட்டும் ரகசியத்தை பகிர்ந்து விடாதீர்கள்.. ஏன் தெரியுமா?

By Sakthi Raj Mar 09, 2026 01:00 PM GMT
Report

 இங்கு நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு குணாதிசயங்கள் கொண்டிருக்கிறார்கள். ஆக, நாம் அவர்களை அவ்வாறே ஏற்றுக்கொள்ள தான் பழகிக்கொள்ள வேண்டுமே தவிர அவர்களை குறை சொல்லி வாழ கூடாது.

அதாவது ஒருவரை பிடிக்கவில்லை என்றால் நாம் விலகி சென்று விடலாம். ஆனால் அவருடனே இருந்து நாம் சண்டையிடக்கூடாது. அப்படியாக ஒருவரிடம் நாம் நட்பாக பழகிக் கொண்டிருக்கும் பொழுது சில ரகசியத்தை பகிர்ந்து இருப்போம். ஆனால் அவர்கள் அந்த ரகசியத்தை பாதுகாக்க தவறியிருப்பார்கள்.

இதற்கு அவர்களுடைய ராசி அமைப்பு நட்சத்திரமும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது. அப்படியாக எந்த ராசியினரிடம் நாம் தவறியும் நம்முடைய ரகசியத்தை பகிர்ந்து கொள்ள கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.

தவறியும் இந்த ராசியினர் மட்டும் ரகசியத்தை பகிர்ந்து விடாதீர்கள்.. ஏன் தெரியுமா? | Never Share Your Secrets With These Zodiac

தவறியும் இந்த 4 விஷயங்கள் செய்யாதீர்கள்.. நல்ல கர்மாவை அது பாதிக்குமாம்

தவறியும் இந்த 4 விஷயங்கள் செய்யாதீர்கள்.. நல்ல கர்மாவை அது பாதிக்குமாம்

 

மிதுனம்:

மிதுன ராசியை பொறுத்தவரை இரட்டை குணங்கள் கொண்டவர்கள். இவர்கள் எப்பொழுது எந்த நிலை மாறுவார்கள் என்று நமக்கு தெரியாது. இவர்களிடம் சொல்ல கூடிய ரகசியமானது கட்டாயம் ஒரு நாள் மற்றவர்களிடம் சொல்லக்கூடும். ஆதலால் முடிந்தவரை மிதுன ராசியினரிடம் முக்கியமான விஷயங்களையும் வாழ்க்கையின் ரகசியத்தை பற்றி பகிர்வதையும் தவிர்த்து விடுவது நல்லது.

கன்னி:

கன்னி ராசியினர் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். இவர்கள் ரகசியத்தை காப்பவர்கள் போல் இருந்தாலும் இவர்களால் எல்லா நேரங்களிலும் அவ்வாறு செயல்பட முடிவதில்லை. இவர்களால் தங்களுடைய உணர்ச்சிகளை சரியாக கையாள முடியாத தன்மை இருப்பதால் இவர்களை நம்பியும் நாம் எந்த ஒரு முக்கியமான காரியங்களையும் ரகசியத்தையும் பகிர்வதை தவிர்ப்பது நல்லது.

வாஸ்து: வீட்டில் குப்பை தொட்டியும் அதிர்ஷ்டம் தருமாம்.. எப்படி தெரியுமா ?

வாஸ்து: வீட்டில் குப்பை தொட்டியும் அதிர்ஷ்டம் தருமாம்.. எப்படி தெரியுமா ?

தனுசு:

தனுசு ராசியினர் பொறுத்தவரை எப்பொழுதும் வெளிப்படையாக பேசக் கூடியவர்கள். இவர்கள் நிறைய நேரங்களில் சபையில் எதை பேசக்கூடாதோ அதை வெளிப்படையாக பேசிவிடுவார்கள். அதில் சில நேரங்களில் நாம் சொல்லக்கூடிய ரகசியமும் அடங்கி இருக்கிறது. அப்படியாக தனுசு ராசியினரிடம் முடிந்தவரை ரகசியத்தை சொல்வதை தவிர்ப்பது நன்மை தரும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US