தவறியும் இந்த 4 விஷயங்கள் செய்யாதீர்கள்.. நல்ல கர்மாவை அது பாதிக்குமாம்
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்மை அறியாமலே நாம் சில நல்ல மற்றும் கெட்ட கர்மாக்களை சேர்த்து வருகின்றோம். அப்படியாக நாம் செய்யக்கூடிய குறிப்பிட்ட சில 4 விஷயங்கள் நம்முடைய நல்ல கர்மாவை பாதித்து, நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளையும் அது தடுப்பதாக சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
1. ஒரு சிலரை பார்த்திருப்போம் அவர்கள் இந்த உலகத்தை எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு நடக்கக்கூடிய நன்மையை அவர்களால் கவனிக்க முடியாது. நல்ல மனிதர்களை அடையாளம் காண முடியாது. இவ்வாறான செயல்கள் கட்டாயம் அவர்களுக்கு அதிர்ஷ்டம் வருவதை தடுக்கிறது.

2. நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சிறிய விஷயங்களுக்கு கூட நன்றி சொல்லி பழக வேண்டும். யாரோ ஒருவர் நம்முடைய இக்கட்டான நிலையில் நமக்கு அவர்கள் துணையாக நின்று இருப்பார்கள். அவர்களை எந்த ஒரு காலத்திலும் நாம் மறக்கக்கூடாது.
நன்றி உணர்வுடன் அவர்கள் செய்த அந்த உதவிக்காக நன்றி செலுத்த வேண்டும். அதை மறந்து உதாசீனம் செய்து செல்லும் பொழுது நிச்சயம் அவர்களுக்கு கெட்ட கர்மாவின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
3. இந்த உலகத்தில் எல்லா மனிதர்களும் இறைவன் என்ற ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைதான். ஆதலால் யாரையும் குறைத்து மதிப்பிடவோ அல்லது அவர்களைப் பற்றி நாம் எடை போட்டு ஒதுக்கி வைப்பதும் கூடாது.

பிடித்தவர்களிடம் பழகுவதும் ஒற்றுப் போகவில்லை என்றால் விலகிச் செல்வது மட்டுமே உத்தமம். அது தவிர்த்து அவர்களுடன் இருந்து அவர்களைப் பற்றி குறை சொல்வதும் அவர்கள் பற்றி பிறரிடம் புறம் பேசுவதும் கெட்ட கர்மாக்களை உண்டு செய்யும்.
4. ஒருவர் எதை செய்தாலும் அதற்கு பாராட்டுக்கள் எதிர்பார்ப்பார்கள். அதாவது ஒருவருக்கு உதவி செய்வதை கூட அவர்கள் மிகவும் பிரபலப்படுத்தி பார்க்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அவ்வாறு செய்யும் பொழுதும் அது அவர்களுடைய கெட்ட கர்மாக்களை அதிகரிக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |