வாஸ்து: வீட்டில் குப்பை தொட்டியும் அதிர்ஷ்டம் தருமாம்.. எப்படி தெரியுமா ?
வாஸ்து சாஸ்திரப்படி நம் வீடுகளில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருட்களும் அதற்குரிய திசையில் வைக்கும் பொழுது நமக்கு நன்மை வழங்குகிறது. அந்த வகையில் வீடுகளில் இருக்கக்கூடிய குப்பைகளை நாம் குப்பை தொட்டியில் போடுவது உண்டு.
ஆனால் அந்த குப்பைத்தொட்டியை நம்முடைய வசதிக்கேற்ப ஒரு சில இடங்களில் வைத்து விடுவோம். ஆனால் உண்மையில் குப்பை தொட்டியை வைப்பதற்கு வாஸ்துரீதியாக அதற்குரிய திசை இருக்கிறது. அங்கு வைக்கும் பொழுது தான் நமக்கு ஒரு நல்ல பலன் கிடைப்பதாக சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

வடகிழக்கு திசை என்பது மிகவும் தூய்மையானதாகவும் புனிதமானதாகவும் கருதப்படுகிறது. இந்த இடத்தில் நேர்மறை ஆற்றல் அதிகம் நிறைந்திருக்கும். ஆதலால், இந்த இடங்களில் நாம் ஒருபொழுதும் குப்பைத் தொட்டியை வைக்கக்கூடாது. இங்கு வைக்கும் பொழுது நமக்கு மன அழுத்தங்கள் உண்டாகும்.
வடகிழக்கு திசை சுத்தமாகவும் வெளிச்சமாகவும் வைக்கும் பொழுது தான் நம் வீட்டில் குடும்பத்தினர் மனத் தெளிவுடன் இருக்கிறார்கள். மேலும் கிழக்கு திசை என்பது சூரியன் மற்றும் புதிய தொடக்கத்தின் அடையாளமாக இருக்கிறது.
இங்கு நாம் குப்பை தொட்டியை வைக்கும் பொழுது நம் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அவை தடுக்கிறது. அதேபோல், தென்மேற்கு திசை நிலை தன்மை மற்றும் உறவுகளை குறிக்கக் கூடியதாக இருக்கிறது.

இந்த பகுதியில் குப்பை தொட்டியை வைப்பது நம்முடைய குடும்பத்தில் மற்றும் தொழில் ரீதியாக ஒரு சிரமத்தை உண்டாக்கும். தென்கிழக்கின் கிழக்கு பகுதியும் வடமேற்கின் மேற்கு பகுதியும் குப்பை தொட்டியை வைப்பதற்கு ஏற்ற திசைகளாக இருக்கிறது.
மேலும் குப்பைத் தொட்டிகள் எப்பொழுதும் சுத்தம் செய்து வைத்துக் கொள்வது அவசியம். அதேபோல் மறந்தும் குப்பைத்தொட்டியை வீட்டின் நுழை வாயிலில் வைக்கக்கூடாது. இது நம்முடைய நேர்மறை ஆற்றலை சீர்குலைக்கும். அதேபோல் படுக்கை அறையில் குப்பை தொட்டியை வைப்பதை நாம் தவிர்த்து விட வேண்டும். அது நமக்கு எதிர்மறை ஆற்றலை கொடுத்து விடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |