ஆன்மீகம்: குளிக்கும் பொழுது இந்த தவறு செய்து விடாதீர்கள்.. தீய சக்திகளால் பாதிக்கப்படலாம்

By Sakthi Raj Apr 30, 2026 09:14 AM GMT
Report

ஒவ்வொரு மனிதனும் தினமும் மனதையும் உடலையும் சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது அவசியம். அந்த வகையில் நம் மனதை சுத்தம் செய்வதற்கு தியானம் மேற்கொள்ள வேண்டும். உடலை சுத்தம் செய்வதற்கு தினமும் தவறாமல் குளிக்க வேண்டும்.

அவ்வாறு ஆன்மீக ரீதியாக நாம் குளிக்கும் போது சில விஷயங்களை பின்பற்றி கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதைப்பற்றி பார்ப்போம்.

ஆன்மீகம்: குளிக்கும் பொழுது இந்த தவறு செய்து விடாதீர்கள்.. தீய சக்திகளால் பாதிக்கப்படலாம் | Why We Shouldnt Take Bath Without Cloths

நம்முடைய முன்னோர்கள் ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் ஒவ்வொரு சாஸ்திரங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். அது நமக்கு உதவியாக இருப்பதோடு சுவாரசியமாகவும் இருக்கிறது. அப்படியாக, ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு முறைகளையும் பின்பற்றுகிறார்கள்.

இந்த 5 பொருட்கள் தானம் செய்தால் எவ்வளவு பெரிய கஷ்டமும் பறந்து விடுமாம்

இந்த 5 பொருட்கள் தானம் செய்தால் எவ்வளவு பெரிய கஷ்டமும் பறந்து விடுமாம்

அந்த வகையில் ஒரு சிலர் குளிக்காமல் சமையலறைக்குள் செல்ல மாட்டார்கள். காரணம் குளிப்பதால் நம்முடைய உடல் சுத்தம் அடைகிறது. அதன் பிறகே நமக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய உணவுகளை தொட வேண்டும் என்று ஒரு சிலர் பின்பற்றுகிறார்கள். அப்படியாக, பலரும் குளிக்கும் பொழுது ஆடையின்றி குளிக்கிறார்கள்.

ஆன்மீகம்: குளிக்கும் பொழுது இந்த தவறு செய்து விடாதீர்கள்.. தீய சக்திகளால் பாதிக்கப்படலாம் | Why We Shouldnt Take Bath Without Cloths

இவ்வாறு குளிப்பதால் சில பிரச்சனைகளுக்கு நாம் ஆளாகலாம் என்று சொல்லப்படுகிறது. நீண்ட நேரம் ஒருவர் ஆடை இல்லாமல் குளிக்கும் பொழுது தீய சக்திகள் வீட்டிற்கு நுழையும் என்று சிலர் நம்புகின்றனர். அதேபோல் ஆடையின்றி குளிப்பதால் மனதையும் வீட்டையும் இது பாதிக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

அதே போல் சாஸ்திரங்களில் ஆடையின்றி குளிப்பது லக்ஷ்மி தேவிக்கு உகந்தது அல்ல என்றும் சொல்லப்படுகிறது. இதனால் பொருளாதார சிக்கல்கள் வரக்கூடும். ஆதலால் நாம் குளிக்கும் பொழுது சிறிய துணியை கட்டிக் கொண்டு குளிப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US