நினைத்த வேலை கிடைக்க சொல்லவேண்டிய விநாயகப்பெருமான் மந்திரங்கள்
நம்முடைய வாழ்க்கையில் தடைகள் வருவது இயல்புதான். ஆனால் நம்முடைய தடையை நீக்கி எவ்வாறு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைகிறோம் என்பதில் தான் நம் வாழ்க்கை அமைகிறது. அப்படியாக நம் வாழ்க்கையில் சந்திக்கின்ற கஷ்டங்கள் மற்றும் தாமதங்கள் விலக இறைவனை நாடுவது அவசியமாக இருக்கிறது.
அந்த வகையில், தடையை போக்கக்கூடிய இறைவனாக விநாயகப் பெருமான் இருக்கிறார். எவர் ஒருவர் வாழ்க்கையில் தொடர்ந்து விநாயக பெருமானை வழிபாடு செய்ய தொடங்குகிறார்களோ அவர்களுக்கு கிரகங்கள் ஏற்படக்கூடிய தடை, தாமதம், கஷ்டம் எல்லாம் படிப்படியாக விலகும்.

அப்படியாக, வாழ்க்கையில் கஷ்டம் இல்லாமல் வாழ நல்ல வேலையும் பணமும் அவசியம். ஆனால் சிலருக்கு இந்த வேலை என்பது நிரந்தரமானதாக அமைவதில்லை. நினைத்த இடத்தில் வேலை கிடைப்பதில்லை.
படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. இவ்வாறான சங்கடங்கள் சந்தித்து கொண்டு இருப்பார்கள் அவர்கள் எல்லாரும் தங்களுடைய கஷ்டங்கள் விலக விநாயகப் பெருமானின் மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்தால் நிச்சயம் அவர்கள் விரும்பிய வேலை கிடைக்கும்.
மந்திரம்:
“ஓம் ஸ்ரீ சிவ சூரிய நாராயண சுவாமினே நமஹ”

இந்த வழிபாட்டை நாம் எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால் சதுர்த்தி திதி அன்று ஆரம்பித்தால் நமக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும். மேற்கண்ட மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும். தொடர்ச்சியாக 48 நாட்கள் நாம் உச்சரித்து வழிபாடு செய்தால் நிச்சயம் நம் வாழ்க்கையில் விநாயகரின் அருளால் விரைவில் நல்ல வேலையம், பதவி உயர்வும் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |