வீட்டில் உள்ள நிம்மதியை கெடுக்கும் 5 மரங்கள்
வாஸ்து சாஸ்திரத்தின்படி உங்களுடைய வீட்டில் என்ன மாதிரியான மரம், செடி மற்றும் கொடிகள் வைக்க வேண்டும் என்ற நியதி உண்டு.
அதை பின்பற்றி வந்தால் மட்டுமே உங்களுடைய வாழ்வும் வீட்டில் வசிக்கும் பிறருடைய வாழ்வும் சீரும் சிறப்புமாக இருக்கும்.
அந்தவகையில் உங்களுடைய வீட்டில் என்னென்ன மரங்கள் இருக்கவே கூடாது என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
வீட்டில் இருக்கவே கூடாத மரங்கள்
பனைமரம்
வாஸ்து சாஸ்திரப்படி பனைமரத்தை வீட்டில் வளர்க்கவே கூடாது. அது வீட்டில் பண பிரச்சினையை கொண்டு வருவதோடு கடன் தொல்லையும் அதிகரித்து விடும். இது உங்களுக்கு மட்டுமல்லாமல் குடும்ப உறுப்பினரையும் பாதிக்கும். எனவே உடனே பனைமரத்தை பிடுங்கி எறிந்து விடுவது நல்லது.
புளியமரம்
வாஸ்து சாஸ்திரப்படி புளியமரத்தை வீட்டில் வளர்க்கவே கூடாது. இது வீட்டில் பண குறைப்பாட்டை கொண்டு வரும். இது பெரும்பாலும் வீட்டில் வளர்க்கப்படுவதில்லை. ஆனால் அந்த மரம் வளர்ந்து இருக்கும் இடத்தில் வீடு கட்டுவதையும் குடியேறுவதையும் தவிரித்துக்கொள்ளுங்கள். இது உங்களுடைய வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
தென்னை மரம்
வாஸ்து சாஸ்திரப்படி ஒரு தென்னை மரத்தை வீட்டில் வளர்க்கக் கூடாது. அதாவது ஒற்றை எண்ணிக்கை வைக்க கூடாது. அவ்வாறு இருந்தால் அது பணம் தொடர்பான சிக்கலில் உங்களை சிக்க வைக்கும். எனவே ஜோடியான தென்னை மரத்தை வீட்டில வைப்பது நல்லதாகும்.
அரசமரம்
வாஸ்து சாஸ்திரப்படி அரசமரத்தை வீட்டில் வளர்க்கக் கூடாது. இது பணவரவை குறைத்து விடும். அரச மரத்தின் அடியில் தான் விநாயகப் பெருமான் இருப்பார். அவ்வாறு புனிதமான மரத்தை வீட்டில் வைத்தால் சீரான முறையில் கவனித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் விட்டால் அது உங்களுக்கே பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும்.
பேரீட்சை மரம்
வாஸ்து சாஸ்திரப்படி பேரீட்சை மரத்தை வீட்டில் வளர்க்கக் கூடாது. இது உங்களுடைய வாழ்வில் பண தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். இதை தவிர்த்துக்கொள்வது நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |