வாஸ்து: தவறியும் இந்த 5 பொருட்களை மிதித்து விடாதீர்கள்.. தோஷம் உண்டாகுமாம்

By Sakthi Raj Mar 14, 2026 04:29 AM GMT
Report

வாஸ்து சாஸ்திரத்தில் சில பொருட்கள் தெய்வங்களோடு தொடர்புடையதாக இருக்கிறது. ஆதலால் அதை நாம் எப்பொழுதும் மரியாதையோடு அணுக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பொதுவாகவே நாம் எந்த ஒரு பொருட்களையும் உதாசீனம் செய்தல் நிச்சயம் நமக்கு அது எதிர்மறை விளைவுகளை கொடுக்கும். அந்த வகையில் குறிப்பாக நாம் ஐந்து பொருட்களை தவறியும் மிதித்து விடக்கூடாது என்று சொல்கிறார்கள். அவை என்ன பொருட்கள் என்று பார்ப்போம்.

வாஸ்து: தவறியும் இந்த 5 பொருட்களை மிதித்து விடாதீர்கள்.. தோஷம் உண்டாகுமாம் | 5 Vastu Things We Shouldnt Step On

1.பசு:

நம்முடைய சாஸ்திரத்தில் பசு காமதேனும் என்கின்ற தெய்வ அம்சமாக போற்றி வழிபாடு செய்யப்படுகிறது. பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாகவும் ஐதீகம்.

அதனால் பசுவை நாம் ஒருபொழுதும் அவமதிப்பதோ காலால் மிதிப்பதோ தள்ளுவதோ போன்ற தவறான செயல்களை ஈடுபடக்கூடாது. இதை நாம் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். தெரியாமல் மிதித்து விட்டாலும் உடனடியாக அதை தொட்டு வணங்கி விட வேண்டும்.

சூரியன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கெல்லாம் பணமழை தானாம்

சூரியன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கெல்லாம் பணமழை தானாம்

2. துளசி மற்றும் வேம்பு:

நம்முடைய இந்து மதத்தில் தாவரங்களில் துளசி மற்றும் வேம்பு மிகவும் புனிதமாதாக கருதப்படுகிறது. அதாவது துளசிச் செடியில் மகாலட்சுமியும், வேம்பு மரத்தில் மாரியம்மன் வாசம் செய்வதாக கருதப்படுகிறது. அதனால் இந்த இரண்டு பொருட்களையும் நாம் உதாசீனம் செய்து காலால் மிதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

3. உணவு பொருட்கள்:

நம்முடைய வாழ்க்கைக்கு பணத்தை விடவும் மிக முக்கியமான ஒன்று உணவு. அந்த உணவில் அன்னபூரணி தேவியின் அருள் இருப்பதாக நாம் வழிபாடு செய்து வருகின்றோம். அதனால் உணவுப் பொருட்களை எந்த சூழ்நிலையிலும் மிதிக்கக்கூடாது.

குறிப்பாக உப்பு கீழே சிந்தி விட்டால் உடனடியாக அதை நாம் எடுத்து விட வேண்டும். உப்பு காலில் மிதிப்படும் பொழுது அது நமக்கு ஒரு மிகப்பெரிய இழப்பை உண்டு செய்யும் என்று சொல்லப்படுகிறது. அதைப்போல் உணவுகளை கால்களில் படும் படி வீடுகளில் இருக்கும் பொழுது நிச்சயம் நமக்கு அது உணவு பஞ்சத்தை கொடுக்கும் என்று சொல்கிறார்கள்.

வாஸ்து: தவறியும் இந்த 5 பொருட்களை மிதித்து விடாதீர்கள்.. தோஷம் உண்டாகுமாம் | 5 Vastu Things We Shouldnt Step On

2026: பங்குனி உத்திரம் எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்?

2026: பங்குனி உத்திரம் எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்?

4. வழிபாட்டு பொருட்கள்:

நாம் வழிபாடு செய்வதற்காக பயன்படுத்தக்கூடிய பூஜை தட்டு, தீபம், கற்பூரம் போன்ற பொருட்களை காலால் தொடுவது மிகவும் தவறாக கருதப்படுகிறது. அதை நாம் மிகவும் கவனமாக கையாள்வது அவசியம்.

5. துடைப்பம்:

வீடுகளில் துடைப்பம் நம்முடைய வீட்டை சுத்தம் செய்யக்கூடியது தான் என்று அதை நாம் சாதாரணமாக எடுத்து விடக்கூடாது. அது தூய்மையின் அடையாளமாக இருக்கிறது. நம்முடைய வீடு சுத்தமாக இருப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் அதை காலால் மிதிப்பது உகந்ததாக கருதப்படவில்லை. அதை உதாசீனம் செய்தால் நம்முடைய வீடுகளில் வறுமை உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US