பலருக்கும் ரோல் மாடலாக விளங்கும் 5 முக்கிய ராசிகள் யார் தெரியுமா?

By Sakthi Raj Jul 08, 2026 08:30 AM GMT
Report

நம் எல்லோருக்கும் என்னதான் நம் மீது தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் முன் உதாரணமாக அதாவது ரோல் மாடலாக ஒரு சிலர் இருப்பார்கள். அந்த வகையில், எந்த ராசியில் பிறந்தவர்கள் ஒருவருக்கு ரோல் மாடலாக விளங்க கூடியவர்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

சிம்மம்:

சிம்ம ராசி பொருத்தவரை இவர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள். தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். இவர்களை பார்க்கின்ற பொழுது எப்படி இவர்கள் கஷ்ட காலங்களையும் தைரியமாக சமாளிக்கிறார் என்ற ஒரு யோசனையும் கேள்வியும் வருகிறது. இவர்களின் தைரியம் பலருக்கும் ரோல் மாடலாக விளங்குகிறது.

கும்பம்:

கும்ப ராசியின் சிந்தனை புரட்சிகரமாக இருக்கும். இவர்களுடைய அணுகுமுறை சூழலுக்கு ஏற்ப மாறுபடும். அதேபோல் இவர்கள் பேச பேச நமக்கும் அறிவு வளர்வது போலான ஒரு சிந்தனையை இவர்கள் தூண்டக்கூடியவர்களாக இருப்பார்கள். வித்யாசமான அணுகுமுறை கொண்டவர்கள். அந்த வித்தியாசமான அணுகுமுறை பலருக்கும் இவர்களை ரோல் மாடலாக மாற்றி விடுகிறது.

ரிஷபம்:

ரிஷப ராசியை போல் எந்த இடத்தில் அமைதி காக்க வேண்டும் எந்த இடத்தில் பேச வேண்டும் என்ற இந்த கட்டுப்பாடு பலரையும் வியப்பில் ஆழ்ந்து விடுகிறது. எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் கோபப்பட கூடாத இடங்களில் இவர்கள் அமைதி காத்து விடுகிறார்கள். நினைப்பதை சாதிப்பதில் இவர்கள் வல்லவர்கள்.

பலருக்கும் ரோல் மாடலாக விளங்கும் 5 முக்கிய ராசிகள் யார் தெரியுமா? | 5 Zodiac Who Is Role Model For Others In Life

மகரம்:

இவர்களுக்கு பிடிவாதம் வந்து விட்டால் கடின உழைப்பின் வழியாக மிகப்பெரிய அளவில் வெற்றியை அடைந்து விடுவார்கள். இவர்கள் எப்பொழுதும் நேர்மறையான சிந்தனை கொண்டவர்கள். இவர்களுக்கு ஓய்வெடுப்பது என்பது பிடிக்காத ஒன்று. இவர்களுடைய இந்த செயல் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக அமைகிறது.

தனுசு:

இவர்கள் எவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்தாலும் அந்த இடங்களில் பாசிட்டிவாக இருப்பார்கள். எதையும் அவ்வளவு மன அழுத்தத்திற்கு கொண்டு போகும் அளவிற்கு இவர்கள் விட மாட்டார்கள். எல்லா விஷயத்தையும் நாம் சரி செய்ய முடியும் என்ற ஒரு அணுகுமுறை இவர்களை சுற்றி இருப்பவர்கள் இவர்களை ரோல் மாடலாக தேர்ந்தெடுக்க செய்கிறது. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US