முருகப்பெருமானை இந்த 7 நாட்களில் மட்டும் வழிபாடு செய்ய தவறி விடாதீர்கள்
கலியுக வரதனாக போற்றக்கூடிய முருகப்பெருமானைஒரு நிமிடம் அமர்ந்து முழு மனதார அவனுடைய நாமத்தை சொல்லி வழிபாடு செய்கின்ற பொழுது உடனடியாக ஓடி வந்து நமக்கு அருள் புரிபவராக இருக்கிறார். அப்படியாக, முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு சிறந்த ஏழு நாட்கள் இருக்கிறது. அந்த ஏழு நாட்கள் என்னவென்றும் அதற்குரிய பலன்களை பற்றியும் பார்ப்போம்.
1. முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு மிக உகந்த நாளாக செவ்வாய்க்கிழமை இருக்கிறது. இந்த நாளில் அவரை வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு தைரியம் வெற்றி, கடும் கடன் தொல்லை குறையும்.

2. முருகப்பெருமானை கிருத்திகை நாளில் வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு முருகப்பெருமானுடைய அருளால் நல்ல குடும்பமும், குடும்பத்தில் அமைதியும் கிடைக்கிறது.
3. முருகப்பெருமானை பௌர்ணமி தினத்தில் வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு மன அமைதி, நல்ல எண்ணங்கள், ஆன்மீகத்தில் முன்னேற்றம் கிடைக்கிறது.
4. முருகப்பெருமானை அமாவாசை தினத்தில் வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைப்பதற்கு உதவியாக இருக்கிறது.

5. முருகப்பெருமானை வைகாசி விசாக தினத்தன்று வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு முருகப்பெருமானின் அருளால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் முன்னேற்றமும் கிடைக்கிறது.
6. முருகப்பெருமானை சஷ்டி திதி அன்று வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு தடைகள் யாவும் நீங்கி நினைத்த காரியம் வெற்றி அடைகிறது.
7. முருகப்பெருமானை தைப்பூச தினத்தன்று வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு வேண்டுதல்கள் யாவும் நிறைவேறி மன உறுதி அதிகரிக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |