தமிழ்நாட்டின் புகழ் பெற்ற 7 விநாயகர் கோயில்கள்
தமிழ்நாட்டின் புகழ் பெற்ற 7 விநாயகர் கோவில்களின் என்னென்ன என்பதையும் அவற்றின் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.
1. பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர்- சிவகங்கை
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று இரவு விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் கோயில் உட் பிரகாரத்தில் வலம் வருவார்.
2. ராஜகணபதி விநாயகர்- பொள்ளாச்சி
இந்த கோயிலில் அரசமரத்தடியில் அமர்ந்துள்ள ராஜ கணபதிக்கு இடது பக்கம் சிவபெருமானும், வலது பக்கம் கிருஷ்ண பெருமானும் உள்ளனர்.
மேலும் மேற்கூரையிலும் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை 100 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது.
3. கரும்பாயிரம் விநாயகர்- கும்பகோணம்
கும்பகோணத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் கரும்பாயிரம் விநாயகர் மூத்த விநாயகராக உள்ளது தான் இந்த கோயிலின் சிறப்பு.
கும்பேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அருகில் உள்ள கரும்பாயிரம் விநாயகரையும் வழிபட்டு செல்வது வழக்கம்.
4. மலைக்கோட்டை உச்சி விநாயகர்- திருச்சி
இந்த கோயிலின் ஆயிரங்கால் மண்டபம் சிறப்பு வாய்ந்தது. 275 அடி உயரம் கொண்ட மலை மீது இந்த விநாயகர் அமர்ந்துள்ளார்.
5. இடுக்கு விநாயகர்- திருவண்ணாமலை
இங்குள்ள கோயிலில் விநாயகர் நந்தி பெருமானுடன் இருப்பது சிறப்பு வாய்ந்தது. இங்கு மூலவர் விநாயகர் இல்லை என்பதும், மூன்று வாசல் கொண்ட சிறிய குகை என்பதும் குறிப்பிடத்தக்கது.
6. தீவனூர் நெற்குத்தி விநாயகர்- விழுப்புரம்
இங்கு விநாயகர் லிங்கம் வடிவில் காட்சியளிக்கிறார். இங்குள்ள விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன.
7. படித்துறை விநாயகர்- அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே படித்துறை விநாயகர் கோயில் அமைந்துள்ளது. விநாயகர் ஜடாமுடியோடு வித்தியாசமாக இந்த கோயிலில் காட்சி தருகிறார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |