அதிர்ஷ்ட தேவதைகளின் ஆசீர்வாதம் பெற வாங்க வேண்டிய 7 ரகசிய பொருட்கள்
நம்முடைய வீடுகளில் எப்பொழுதும் அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறந்தே இருக்க வேண்டும். அதற்கு நாம் வீடுகளை சுத்தமாக வைப்பதும், எப்பொழுதும் நல்ல சிந்தனைகளோடும், நல்ல சொற்களைப் பயன்படுத்துவதோடும் தவறாமல் வீடுகளில் விளக்கு ஏற்றுவதும் அவசியமாக இருக்கிறது.
இவையெல்லாம் கடந்து நம் வீடுகளில் அதிர்ஷ்ட தேவதைகளை வரவேற்க 7 பொருட்களை வைப்பதும் நல்ல பலன் கொடுப்பதாக சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

1. வெள்ளெருக்கு வேர் விநாயகரின் அம்சமாக கருதப்படுகிறது. அதனால் இதனை நம் வீடுகளில் வைக்கும் பொழுது கண் திருஷ்டி செய்வினை கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் நம்மை நெருங்காமல் பாதுகாக்கிறது.
2. வீடுகளில் கருப்பு குன்றி மணி வைக்கும் பொழுது நம்முடைய எதிரிகள் தொல்லையை முற்றிலுமாக விரட்டுகிறது.
3. வீடுகளில் சாம்பிராணி தூபம் போடும் பொழுது அதில் வெண்கடுகு போட்டு தூபம் காண்பித்தால் வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் விலகுகிறது.
4. வீடுகளில் வலம்புரி சங்கு வைப்பதால் குபேரனுடைய முழு ஆசீர்வாதத்தையும் நாம் பெற்று செல்வ செழிப்போடு வாழலாம்.
5. நாம் வீடுகளில் இருக்கக்கூடிய பணப்பெட்டிக்குள் மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடித்து வைத்தால் செல்வ செழிப்பு உண்டாகும்.
6. முக்கிய காரியங்கள் அல்லது பேச்சுவார்த்தைகளுக்கு செல்லும் பொழுது நம்முடன் வசம்பு கையில் வைத்துக் கொண்டால் பேச்சில் வசீகரம் உண்டாகும்.
7. நம்முடைய வீடுகளில் வலது காலை தூக்கிப் பிடிக்கக்கூடிய யானை சிலை அல்லது படம் வாங்கி வைப்பதால் நம்முடைய வீடுகளில் செல்வ செழிப்பு அதிகரிக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |