இந்த 7 விஷயங்கள் வாழ்க்கையில் நடந்தால் அதிர்ஷ்டம் வரப்போவதின் அர்த்தமாம்
மனிதர்கள் என்னதான் கடின உழைப்பை போட்டாலும் சில நேரங்களில் இந்த பிரபஞ்சத்தினுடைய அருள் இருந்தால் மட்டுமே நிறைய விஷயங்களை நாம் சாதித்துக் கொள்ள முடிகிறது. அப்படியாக ஒருவர் வாழ்க்கையில் இந்த 7 விஷயங்கள் நடந்தால் அவர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ஷ்டம் சேரப்போவதின் அறிகுறியாக சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.
1. ஜோதிட ரீதியாக ஆண்களுக்கு வலது கையிலும், பெண்களுக்கு இடது கையிலும் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டால் அது அவர்களுக்கு பண வரவை குறிப்பதாகும். காலம் காலமாகவே உள்ளங்கை அரித்தால் பணம் வரும் அல்லது செலவாகும் என்பதின் நம்பிக்கையாக இருக்கிறது.

2. எட்டு மங்களமான பொருட்களில் சங்கும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சங்கு சிவன் மகாலட்சுமி, மகாவிஷ்ணு ஆகியோரை குறிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. ஒருவர் காலையில் எழும்பொழுது சங்கொலி கேட்கிறது என்றால் அது அவர்களுக்கு ஒரு நல்ல தொடக்கத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. சங்கு ஒலி வீட்டில் இருக்கின்ற எதிர்மறை ஆற்றலை நீக்கி நமக்கு நேர்மறை சக்தியை அதிகரிக்கிறது.
3. இந்து மதத்தில் தேன் மகாலட்சுமி அம்சமாக பார்க்கப்படுகிறது. ஒருவர் வீட்டிற்குள் கருப்பு நிற தேனீ சுற்றித்திரிந்தால் அது செல்வத்தின் அடையாளமாக இருக்கிறது.
4. அதேபோல், மகாலட்சுமி அம்சமாக கருதப்படும் பசு, காலை நேரங்களில் உணவு கேட்டு நம் வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தால் அது மிகப்பெரிய அதிர்ஷ்டமாக இருக்கிறது. இந்து மதத்தில் பசு தெய்வீக சக்தியின் சின்னமாக இருக்கிறது.

5. வீடுகளில் துளசி செடி நன்றாக துளிர்த்து செழித்து வளர்ந்தால் நமக்கு தெய்வங்களின் உடைய அருள் இருப்பதன் அடையாளமாக பார்க்கப்படுகிறது. அவை நம்முடைய வீட்டிற்கு ஆசிர்வாதத்தையும் நல்ல அதிர்வலையையும் கொடுக்கிறது.
6. பூனை நம்முடைய வீட்டிற்கு வந்து குட்டி போட்டால் அந்த வீட்டில் ஒரு நல்ல சக்தி சூழ்ந்து இருப்பதின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அந்த வீட்டில் தெய்வீக ஆற்றல் நிறைந்திருப்பதன் அடையாளமாகவும் கருதப்படுகிறது.
7. ஆந்தை மகாலட்சுமி வாகனமாக இந்து மதத்தில் பார்க்கப்படுகிறது. அடிக்கடி நாம் ஆந்தையை பார்க்க நேர்ந்தால் அது மகாலட்சுமியின் ஆசிர்வாதம் நமக்கு கிடைப்பதின் அறிகுறியாக இருக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |