தமிழ்நாட்டில் சக்தி வாய்ந்த இந்த 8 அம்மன் ஆலயங்களுக்கு செல்ல தவறாதீர்கள்

Report

  சக்தி வழிபாடு என்பது நமக்கு அதிர்ஷ்டத்தையும் எதையும் போராடி சாதிக்க கூடிய மன வலிமையும் கொடுக்கக்கூடிய வழிபாடாக இருக்கிறது. அப்படியாக நம்முடைய தமிழ்நாட்டில் அமைந்துள்ள 8 சக்தி வாய்ந்த அம்மன் ஆலயங்கள் பற்றி பார்ப்போம். இங்கு கட்டாயம் ஒரு முறை சென்று வழிபாடு செய்து வர வாழ்க்கையில் நிச்சயம் நல்ல மாற்றம் பெறலாம்.

தமிழ்நாட்டில் சக்தி வாய்ந்த இந்த 8 அம்மன் ஆலயங்களுக்கு செல்ல தவறாதீர்கள் | 8 Famous Amman Temple In Tamilnadu In Tamil

1. மீனாட்சி அம்மன் கோவில் மதுரை:

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய முக்கியமான திருக்கோவிலில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் ஒன்று. இக்கோயில் வைகை ஆற்றின் தென் பகுதியில் சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் மிக கம்பீரமாக காட்சியளிக்க கூடிய ஒரு அற்புதமான திருக்கோயிலாகும்.

இங்கு சிவபெருமான் சுந்தரேஸ்வரர் என்ற திருநாமத்திலும் அம்பாள் மீனாட்சி அம்மன் என்ற திருப்பெயரிலும் நமக்கு காட்சி கொடுக்கிறார்கள். இக்கோயிலில் சிறப்பு அம்சம் என்னவென்றால் எல்லா சிவன் கோவில்களிலும் முதலில் சிவபெருமானை வழிபாடு செய்த பிறகு நாம் அம்பாளை வழிபாடு செய்வோம்.

ஆனால் இங்கு சக்தி தேவியை போற்றி வழிபாடு செய்யும் வகையில் முதலில் அம்மனை தரிசித்த பிறகு தான் நமக்கு சிவபெருமானின் தரிசனம் கிடைக்கிறது. மேலும் இக்கோயிலில் முதல் பூஜை மீனாட்சி அம்மனுக்கே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கும் அனைத்து பெண் மற்றும் ஆண்கள் வந்து வழிபாடு செய்ய மீனாட்சி அம்மனின் அருளால் நல்ல வரன் அமைந்து சிறப்பான திருமண வாழ்க்கை பெறலாம்.

2.ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன் திருக்கோவில் திருவெற்றியூர்:

ராமநாதபுரத்தில் வேண்டுபவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அருளிச் செய்யும் ஆலயமாக ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன் திருக்கோயில் அமையப் பெற்றிருக்கிறது. இங்குள்ள அம்மனை மருத்துவச்சி என்றும் போற்றி வழிபாடு செய்கிறார்கள். மேலும் திருப்பாற்கடலைக் கடைய மத்தாக பயன்படுத்திய வாசு நாகத்திற்கு சாப விமோசனம் தந்த திருக்கோயில் என்று புராணங்கள் சொல்கிறது.

3. காமாட்சி அம்மன் கோவில் காஞ்சிபுரம்:

தமிழ் நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் அனைவரும் அறிந்த, எல்லோரும் ஒரு முறையாவது சென்று வழிபாடு செய்ய வேண்டிய முக்கிய கோவிலாக காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் திருக்கோயில் இருக்கிறது.

இக்கோயில் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடமாகும். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு சென்று வர நம் வாழ்க்கையில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

ராமநாதபுரத்தில் தரிசிக்க வேண்டிய முக்கியமான ஆலயங்கள்

ராமநாதபுரத்தில் தரிசிக்க வேண்டிய முக்கியமான ஆலயங்கள்

4. சமயபுரம் மாரியம்மன் கோவில்:

தமிழ்நாட்டில் அனைவரும் அறிந்த மற்றும் தமிழ்நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் திருக்கோயிலில் சமயபுரம் மாரியம்மன் கோவில் முக்கிய பங்கு வகிக்கிறது. திருச்சி மாவட்டத்தில் கண்ணபுரம் எனும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

இங்கு நடைபெறும் பூச்சொரிதல் எனும் நிகழ்வு மிகவும் பிரபலமாகும். மாசி மாதத்தில் நடைபெறக்கூடிய இந்த விழாவில் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். வாழ்க்கையில் தொடர் தடைகளை சந்திப்பவர்கள் இங்கு வந்து அம்மனிடம் மண்டையிட்டு வேண்ட அம்மனின் அருளால் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி கிடைக்கிறது.

தமிழ்நாட்டில் சக்தி வாய்ந்த இந்த 8 அம்மன் ஆலயங்களுக்கு செல்ல தவறாதீர்கள் | 8 Famous Amman Temple In Tamilnadu In Tamil

5. புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் புன்னைநல்லூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில். இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக புற்று வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு இந்த அம்மனை சென்று வழிபாடு செய்பவர்களுக்கு கட்டாயம் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் உண்டாகும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

7. பண்ணாரி மாரியம்மன் கோவில்:

ஈரோடு மாவட்டத்தில் பண்ணாரி எனும் இடத்தில் அருள்மிகு பண்ணாரி அம்மன் திருக்கோயில் அமைய பெற்றிருக்கிறது. இங்கு அம்மன் சுயம்புவாக தோன்றியதால் இங்கு செல்லும் பக்தர்களுக்கு விபூதி அல்லாமல் புற்றுமண்ணையே பிரசாதமாக கொடுக்கிறார்கள். இங்கு சென்று அம்மனிடம் வேண்ட தீராத நோய்களும் தீர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும்.

8. பகவதி அம்மன் கோவில் மண்டைக்காடு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டை காடு என்னும் இடத்தில் அமைந்து இருக்கிறது பகவதி அம்மன் திருக்கோயில். இவை பெண்களின் சபரிமலை என்று அழைக்கிறார்கள். 15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூறையை முட்டிக் கொண்டிருக்கும் புற்றுதான் பகவதி அம்மனாக இன்று பக்தர்கள் போற்றி வழிபாடு செய்கிறார்கள்.

இங்கு நடைபெறும் மாசி திருவிழாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து அம்மனின் அருளை பெறுகிறார்கள். அதாவது மனம் தொடர்பான என்ன வியாதிகள் இருந்தாலும் அவை இங்கு வந்து அம்மனை வழிபாடு செய்ய விலகும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.        

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US